நாமதேவர்

தமிழர்விக்கியிலிருந்து
(நாம்தேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நாமதேவர்
படிமம்:Namdev maharaj.JPG
நாமதேவர்
பிறப்புபொ.ஊ. அண். 26 அக்டோபர் 1270
நர்சி-பாமனி, ஹிங்கோலி மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா
இறப்புபொ.ஊ. அண். 3 சூலை 1350
பண்டரிபுரம்
சமயம்இந்து சமயம்
தத்துவம்வர்க்காரி, இந்து சமயம் / சீக்கியம்
படிமம்:Photograph of the shrine of Bhagat Namdev in Ghuman, as published in 'The Sikh Religion' (1909).jpg
பஞ்சாப் மாநிலத்தின் கோமன் கிராமத்தில் நாமதேவர் சன்னதியுடன் கூடிய தபியானா சாகிப் குருத்துவார், புகைப்படம் ஆண்டு, 1909

துறவி நாம்தேவ் (26அக்டோபர், 1270–3 ஜூலை1350) (மராத்தி: संत नामदेव) பொ.ஊ. 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு வர்க்காரி வைணவத் துறவி. இவர் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள இங்கோலி மாவட்டத்தில் உள்ள நர்சி-பாமனி என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய தந்தை தாம்சேட் ஒரு தையற்கலைஞர், இவருடைய தாயார் கோனாபாய்.

இவருடைய சமயக்கருத்துக்கள், வாழ்க்கையை வாழும் முறை பற்றியும்(गृहस्थ जीवन), திருமணத்தின் மூலமும் குடும்ப பொறுப்பு ஏற்பதின் மூலமும் ஒருவர் வாழ்க்கையில் தெளிவு பெறலாம் என்னும் கருத்தை வலியுறுத்தின.[1] இவர் பண்டரிபுரத்தில் வாழ்ந்து பகவான் விட்டலரின் பெரும் பக்தனாக வாழ்ந்தவர்.[2] விட்டலர் மீது பல பதிகங்களைப் பாடியவர். இவரது பாடல்களில் சில சீக்கியர்களின் குரு கிரந்த் சாகிப் நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவரது சீடர்களில் ஒருவர் ஜனாபாய் ஆவார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நாமதேவர்&oldid=414263" இலிருந்து மீள்விக்கப்பட்டது