ஆள்கூறுகள்: 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E / 12.5; 79.62

வந்தவாசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு
வரிசை 33: வரிசை 33:


== வரலாறு ==
== வரலாறு ==
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. 1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலூன்ற காரணமானது.[[File:Fort - Vandavasi.jpg|thumb|வந்தவாசிக் கோட்டை வெளிப்புறத் தோற்றம்]]
பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. 1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலூன்ற காரணமானது.[[படிமம்:Fort - Vandavasi.jpg|thumb|வந்தவாசிக் கோட்டை வெளிப்புறத் தோற்றம்]]


==வந்தவாசி கோட்டை==
==வந்தவாசி கோட்டை==
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்
வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்
[[File:One Part of Vandavsi Fort.jpg|thumb|வந்தவாசிக் கோட்டை உட்புறத் தோற்றம்]]
[[படிமம்:One Part of Vandavsi Fort.jpg|thumb|வந்தவாசிக் கோட்டை உட்புறத் தோற்றம்]]


==கோவில்கள்==
==கோவில்கள்==
[[File:Thennangur Panduranga temple panorama.jpg|thumb|250px|தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோவில்]]
[[படிமம்:Thennangur Panduranga temple panorama.jpg|thumb|250px|தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோவில்]]
வந்தவாசியில் இருந்து 23 [[கிமீ]] தொலைவில் [[தேசூர்]] அருகில் [[சியமங்கலம்]] மற்றும் அறியம்பூண்டி என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது<ref>[http://www.jainworld.org/pictures/temples/Tamilnadu%20-%20Siyamangalam%20Malai.htm TAMILNADU - SIYAMANGALAM MALAI]</ref><ref>[http://www.paintershub.com/?p=140 Cave temples of Mahendravarman I (Pallava)]</ref>.
வந்தவாசியில் இருந்து 23 [[கிமீ]] தொலைவில் [[தேசூர்]] அருகில் [[சியமங்கலம்]] மற்றும் அறியம்பூண்டி என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது<ref>[http://www.jainworld.org/pictures/temples/Tamilnadu%20-%20Siyamangalam%20Malai.htm TAMILNADU - SIYAMANGALAM MALAI]</ref><ref>[http://www.paintershub.com/?p=140 Cave temples of Mahendravarman I (Pallava)]</ref>.


வரிசை 74: வரிசை 74:


6. [[செய்யூர்]] - [[மேல்மருவத்தூர்]] - [[வந்தவாசி]] சாலை
6. [[செய்யூர்]] - [[மேல்மருவத்தூர்]] - [[வந்தவாசி]] சாலை

7.[[வந்தவாசி]]-[[பெரணமல்லூர்]] சாலை


ஆகிய சாலைகள் [[வந்தவாசி]] நகரத்தை இணைக்கிறது.
ஆகிய சாலைகள் [[வந்தவாசி]] நகரத்தை இணைக்கிறது.

10:00, 22 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

வந்தவாசி
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
வந்தவாசி
அமைவிடம்: வந்தவாசி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E / 12.5; 79.62
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
வட்டம் வந்தவாசி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர்
சட்டமன்றத் தொகுதி வந்தவாசி

-

மக்கள் தொகை 31,320 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


74 மீட்டர்கள் (243 அடி)

குறியீடுகள்

வந்தவாசி (ஆங்கிலம்: VANDAVASI), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E / 12.5; 79.62 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 மீட்டர் (242 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அமைவிடம்

வந்தவாசி நகரத்திலிருந்து மாவட்டத் தலைநகரம் மற்றும் ஆண்மீக நகரான திருவண்ணாமலையிலிருந்து 76 கிமீ தொலைவிலும், பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணியிலிருந்து 44 கிமீ தொலைவிலும், கோட்டை நகரான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும், போளூரிலிருந்து 58 கிமீ தொலைவிலும், பட்டு நகரானகாஞ்சிபுரத்திலிருந்து 41 கிமீ தொலைவிலும், செய்யாறு ஆறு நகரான செய்யாறிலிருந்து 21 கிமீ தொலைவிலும், மாநில தலைமையிடமான சென்னையிலிருந்து 116 கிமீ தொலைவிலும், சக்தி பீடம் மேல்மருவத்தூரிலிருந்து 34 கிமீ தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 38 கிமீ தொலைவிலும், அண்டை மாநிலமான புதுச்சேரியிலிருந்து 76 கிமீ தொலைவிலும்,

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,326 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 31,320 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3337ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,242 மற்றும் 410 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.86%, இசுலாமியர்கள் 34.73%, கிறித்தவர்கள் 3.03%, தமிழ்ச் சமணர்கள 1.28% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[5]

வரலாறு

பதினெட்டாம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டிற்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே ஆசியாவை கைப்பற்றும் முயற்சியில் போர் நடந்தது. அப்போது மூன்றாவது கர்நாடக போர் என்ற பெயரில் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து போர் நடந்து வந்தது. இந்த போர் 1756 முதல் 1763 வரை நடைபெற்றது. இதில் 1760 ஆம் ஆண்டு வந்தவாசி கோட்டையை கைப்பற்ற இரு நாடுகளும் மோதிக்கொண்டன. 1761-ல் இந்த போரில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அயர் கூட் தலைமையிலான படை பிரான்சு நாட்டை சேர்ந்த ஜெனரல் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது. இந்த வெற்றி பிரிட்டன் நாட்டின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது. பிரிட்டன் அரசாங்கம் இந்தியாவில் காலூன்ற காரணமானது.

வந்தவாசிக் கோட்டை வெளிப்புறத் தோற்றம்

வந்தவாசி கோட்டை

வந்தவாசி கோட்டையிலிருந்து செஞ்சிக் கோட்டை வரை சுரங்கப் பாதை இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த சுரங்கப் பாதைகள் காலப் போக்கில் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அழிந்து விட்டதாக கூற படுகிறது. தற்போது கோட்டையில் மிஞ்சி இருப்பது சில பகுதிகள் மட்டுமே. மக்கள் ஆக்கிரமிப்பால் பெரும்பாலான கோட்டை அழிந்துவிட்டது. ஆனால் இப்போதும் கோட்டைக்குள் நுழைந்தால் பழங்காலத்து கத்தி, போர் உடைகள், குதிரை கடிவாளம், பீரங்கி குண்டுகள் போன்ற ஏராளமான பொருட்கள் கிடைப்பதாக கூறப் படுகின்றது.. மேலும் இந்த கோட்டையின் சுரங்கத்தினுள் புதையல்கள் இருக்க கூடும் எனவும் மக்கள் நம்புகின்றனர்

வந்தவாசிக் கோட்டை உட்புறத் தோற்றம்

கோவில்கள்

தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோவில்

வந்தவாசியில் இருந்து 23 கிமீ தொலைவில் தேசூர் அருகில் சியமங்கலம் மற்றும் அறியம்பூண்டி என்ற கிராமங்கள் உள்ளன. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது[6][7].

ஜலகண்டீஸ்வரர் ஆலயம்

வந்தோரை வாழவைக்கும் வந்தவாசியில் 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த ஈஸ்வரன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பும் உண்டு. மழை காலங்களில் இந்த கோவில் முழுதும் தண்ணீரால் நிரம்பி விடும். மூலவர் சுயம்பு நாத ஈஸ்வரர் என்கிற ஜலகண்டீச்வரரை தொடும் அளவிற்கு நீர் ஊற்றெடுத்து தேங்கும். இது எவ்வளவு உயரம் தேங்கும் என்றால் ஒரு மனிதரின் இடுப்பு அளவிற்கு என்றும் கூறலாம். இவ்வாறு ஏன் அந்த கால கட்டத்தில் அமைக்கப்பட்டது என்றால் "ஈஸ்வரர் கோபத்தில் நெற்றிக்கண் திறந்து பார்க்கும் பொது மிகுந்த உஷ்ணமாக இருக்கும். அதனை குளிர்விக்க தண்ணீருக்குள் தவம் புரிவார் ஈஸ்வரர். அதனால் தான் அவருக்கு ஜலகண்டீஸ்வரர் என பெயரும் வந்தது" என்று கூறுவர். ஆகவே தான் ஈஸ்வரர் தண்ணீரில் மூழ்கும்படி இவ்வாறு வடிவமைத்து உள்ளனர். ஆனால் பக்தர்கள் உள்ளே செல்ல அவதிப்படுவதால் தற்போது கட்டமைப்புகளில் மாற்றம் செய்து தண்ணீர் உள்ளே தேங்காத வண்ணம் அமைத்துள்ளனர். இந்த கோவிலின் புதுப்பிக்கும் பணி மற்றும் கும்பாபிஷேகம் 2011 ஆனி மாதம் முடிந்தது.

தென்னாங்கூர் பாண்டுரங்கர் கோவில்

தென்னாங்கூரில் உள்ள பாண்டுரங்கர் கோவிலும் பார்க்கத்தகுந்தது. தென்னாங்கூர் கோவில் மற்ற கோவில்களை போல இல்லாமல் பூரி ஜகன்னாதர் கோவிலை போன்ற கோபுர வடிவம் கொண்ட கோவில் ஆகும். மேலும் சிறந்த தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்ட பைபர் கிளாஸ் பைண்டிங் முறையில் உட்கட்டமைப்பில் உள்ள படங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான வெள்ளிக் கதவுகள் மூலவரின் சன்னதியில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் பெருமாள் கடவுளுக்கு திருப்பதி தேவஸ்தான முறையில் அலங்காரங்களும், ஆராதனைகளும் செய்யப்படுகின்றன.

பெருமாள் கோவில்

பழங்காலத்தில் இந்துக்கள் சிவ கோத்திரம் மற்றும் விஷ்ணு கோத்திரம் என்று இரு வேறு மதத்தவர் போல பிரிந்து காணப்பட்டனர். இவர்களுக்குள் போட்டிகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவி வந்தன. இவைகளைப் போக்க ஒரு மாமுனிவரின் ஆணைப்படி "ஹரியும் சிவனும் ஒன்று" என்பதை சுட்டிக்காட்ட நாடெங்கிலும் ஒரே சுற்றுச்சுவரின் உள்ளேயே சிவன் மற்றும் பெருமாள் சன்னதிகள் நிறுவப்பட்டன. அவ்வாறு கட்டப்பட்ட கோவில்களுள் வந்தவாசி பெருமாள் கோவிலும் ஒன்று ஆகும். இந்த கோவிலின் புதுப்பித்தல் மற்றும் கும்பாபிஷேகம் முடிந்து விட்ட போதிலும், தலை வாசல் கோபுரம் எழுப்பும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று மிக அழகாகப் பார்க்க கம்பீரமாய் காட்சி தருகிறது.மற்றுமொரு சிறப்பாக பெருமாள் படுத்த கோலத்தில் சிறிய சிலையாக பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

கோட்டை ஆஞ்சநேயர் கோவில்

இந்த கோவில் அமைவிடம் வந்தவாசி கோட்டையின் நுழைவு வாயில் ஆகும். வந்தவாசி கோட்டை மிகவும் சேதம் அடைந்துவிட்ட நிலையிலும் இந்த வீர ஆஞ்சநேயர் கோவில் மட்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவில் பக்கத்தில் பழங்காலத்தில் மன்னர்களாலும் பிரிட்டனாலும் உபயோகிக்கப்பட்ட பீரங்கி ஒன்றும் உள்ளது. கோவிலும் பீரங்கியும் தற்போது அறநிலையத் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சாலை வசதிகள்

வந்தவாசி நகரத்தை சாலை மூலம் இனணப்பதற்காக சாலை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

1. புதுச்சேரி - திண்டிவனம்- வந்தவாசி - ஆரணி - வேலூர் சாலை

2. ஆற்காடு - செய்யாறு - வந்தவாசி சாலை

3. திருவண்ணாமலை - போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - சென்னை சாலை

4. வந்தவாசி - உத்திரமேரூர் சாலை

5. காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை

6. செய்யூர் - மேல்மருவத்தூர் - வந்தவாசி சாலை

7.வந்தவாசி-பெரணமல்லூர் சாலை

ஆகிய சாலைகள் வந்தவாசி நகரத்தை இணைக்கிறது.


போக்குவரத்து வசதிகள்

வந்தவாசி நகரத்தில் பேருந்து நிர்வாக வசதிக்காக 2 பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அவை:-


1. புதிய பேருந்து நிலையம் 2. பழைய பேருந்து நிலையம்


திருவண்ணாமலை, ஆரணி, போளூர்,சென்னை, செய்யாறு, உத்திரமேரூர், மேல்மருவத்தூர், திண்டிவனம், சேத்துப்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, வேலூர், செஞ்சி, பெரணமல்லூர், ஆற்காடு, திருத்தணி, திருப்பதி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், சிதம்பரம், செங்கம், பெங்களூரு, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கடலூர், கும்பகோணம், பழனி

மேற்கண்ட நகரங்களுக்கு வந்தவாசி நகரத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Vandavasi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. வந்தவாசி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
  6. TAMILNADU - SIYAMANGALAM MALAI
  7. Cave temples of Mahendravarman I (Pallava)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வந்தவாசி&oldid=127452" இலிருந்து மீள்விக்கப்பட்டது