போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>குணசேகரன்.மு No edit summary |
||
| வரிசை 85: | வரிசை 85: | ||
| blank5_info_sec1 = 58 கிமீ |
| blank5_info_sec1 = 58 கிமீ |
||
| blank6_name_sec1 = |
| blank6_name_sec1 = |
||
திருப்பதியிருந்து தொலைவு |
|||
| blank6_info_sec1 = |
| blank6_info_sec1 = 177 கிமீ |
||
| blank7_name_sec1 = |
| blank7_name_sec1 = |
||
| blank7_info_sec1 = |
| blank7_info_sec1 = |
||
| website = [[www.townpanchayat.in/Polur|போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி]] |
| website = [[www.townpanchayat.in/Polur|போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி]] |
||
| footnotes = |
| footnotes = |
||
}} |
}} |
||
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]:Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள, [[போளூர் வட்டம்]], [[போளூர் ஊராட்சி ஒன்றியம்]], [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியும்]] அமைந்துள்ளது. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும். |
'''போளூர்''' ([[ஆங்கிலம்]]:Polur) [[இந்தியா|இந்திய நாடு]], [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலமான]], [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள, [[போளூர் வட்டம்]], [[போளூர் ஊராட்சி ஒன்றியம்]], [[போளூர் (சட்டமன்றத் தொகுதி)]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய [[பேரூராட்சி|சிறப்பு நிலை பேரூராட்சியும்]] அமைந்துள்ளது. இது [[ஆரணி மக்களவைத் தொகுதி|ஆரணி மக்களவைத் தொகுதிக்கு]] உட்பட்டதாகும். |
||
17:40, 4 திசம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்
போளூர் POLUR | |
|---|---|
| ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாகாணம் | தொண்டை நாடு |
| வருவாய் கோட்டம் | ஆரணி |
| சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
| தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
| அரசு | |
| • வகை | தேர்வு சிறப்பு நிலை பேரூராட்சி |
| • நிர்வாகம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
| • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
| • மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
| • சட்டமன்ற உறுப்பினர் | திரு.சேகரன் |
| • மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 12.58 km2 (4.86 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
| ஏற்றம் | 173 m (568 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 28,123 |
| இனம் | போளூர்காரன் |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீடு | 606803 |
| இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04181 |
| வாகனப் பதிவு | TN 97 |
| சென்னையிலிருந்து தொலைவு | 172 கி.மீ |
| திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 38 கி.மீ |
| வேலூரிலிருந்து தொலைவு | 53 கி.மீ |
| ஆரணியிலிருந்து தொலைவு | 29 கிமீ |
| வந்தவாசியிலிருந்து தொலைவு | 58 கிமீ |
| திருப்பதியிருந்து தொலைவு | 177 கிமீ |
| இணையதளம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
போளூர் (ஆங்கிலம்:Polur) இந்திய நாடு, தமிழ்நாடு மாநிலமான, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, போளூர் வட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியம், போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலை பேரூராட்சியும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
அமைவிடம்
கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 38 கிமீ; வடக்கே வேலூர் 52 கிமீ; தென்கிழக்கே ஆரணி 29 கிமீ; கிழக்கே சேத்துப்பட்டு 28 கிமீ மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கிமீ தொலைவில் உள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 171 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.58 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,706 வீடுகளும், 28,123 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர். [3]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
சிறப்புகள்
போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அருகில் உள்ளது. திருவண்ணாமலைக்கு வேலூரிலிருந்து வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகம்ஆகும் .போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையிில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
இது சுயம்பு வடிவம் ஆனது.
சாலை வசதிகள்

போளூர் நகரில் சாலை வசதிகள் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.
- மாநில நெடுஞ்சாலை - NH 38 கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை - NH 234 விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - வேலூர் - மங்களூரு
- மாநில நெடுஞ்சாலை - NH 41 திருவண்ணாமலை - போளூர் - ஆரணி சாலை
- மாநில நெடுஞ்சாலை - போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - உத்திரமேரூர் - சென்னை சாலை
- மாவட்ட சாலை - போளூர் - சமுனாமரத்தூர் சாலை
- மாவட்ட சாலை - போளூர் - கட்டிப்பூண்டி - துரிஞ்சிகுப்பம் சாலை
- மாவட்ட சாலை - போளூர் - தேவிகாபுரம்- அவலூர்பேட்டை சாலை
ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.
போக்குவரத்து வசதிகள்
இதனையும் காண்க: போளூர் பேருந்து நிலையம்
போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது.
- போளூரிலிருந்து சென்னைக்கு, ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி (தடம் எண் - 202 UD) வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளது.
- மாநில தலைமையிடமான சென்னைக்கு, சேத்துப்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர் (தடம் எண் - 148) வழியாக 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகன்றன.
- போளூரிலிருந்து, வேலூர், கண்ணமங்கலம் மற்றும் திருவண்ணாமலைக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
- ஆரணி, சேத்துப்பட்டு, தேவிகாபுரம் மற்றும் வந்தவாசி ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவைகள் உள்ளது.
- வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து, திருவண்ணாமலை வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கு நின்று செல்லும். குறிப்பாக கள்ளக்குறிச்சி, திருப்பூர், சேலம், கோயம்புத்தூர், ஒகேனக்கல், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், ஆத்தூர், திருச்சி, சிதம்பரம், பண்ருட்டி, மதுரை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மார்த்தாண்டம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு வந்து செல்லும்
- திருவண்ணாமலையிலிருந்து, ஆரணி, செய்யாறு வழியாக காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த போளூர் பேருந்து நிலையம் வந்து செல்லும்.
- பெங்களூரு, மேல்மருவத்தூர், ஆற்காடு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருத்தணி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
- துரிஞ்சிகுப்பம், சித்தேரி(துரிஞ்சிகுப்பம்) கண்ணமங்கலம், ஆதமங்கலம்புதூர், அவலூர்பேட்டை, பாடகம், மன்சுராபாத், அத்திமூர் ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
ரயில் போக்குவரத்து
போளூரில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - களம்பூர் (ஆரணி ரோடு) - வேலூர் (காட்பாடி) - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
ஆதாரங்கள்
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
- ↑ போளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Polur Population Census 2011
- ↑ "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)