போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>குணசேகரன்.மு |
imported>குணசேகரன்.மு |
||
| வரிசை 248: | வரிசை 248: | ||
{{main|போளூர் பேருந்து நிலையம்}} |
{{main|போளூர் பேருந்து நிலையம்}} |
||
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் [[விழுப்புரம்]] பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]] , [[கண்ணமங்கலம்]], [[புதுப்பாளையம்]], [[சேத்துப்பட்டு]], [[திருவண்ணாமலை]], [[கலசப்பாக்கம்]] மற்றும் [[அவலூர்பேட்டை]] உடனும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் [[திருவண்ணாமலை]] செல்லவேண்டும் என்றால் ''' தேசிய நெடுஞ்சாலை 234 ''' வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது. |
|||
போளூரில் போக்குவரத்து வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் பேருந்து சேவைகள் நடைபெறுகிறது. |
|||
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[போளூர்|போளூரிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[பூவிருந்தவல்லி]] (தடம் எண் - 202 UD மற்றும் 204 UD) வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளது. |
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[போளூர்|போளூரிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[பூவிருந்தவல்லி]] (தடம் எண் - 202 UD மற்றும் 204 UD) வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளது. |
||
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] (தடம் எண் - 148) வழியாக அரைமணி நேரத்திற்கு ஒரு வீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. |
* மாநில தலைமையிடமான [[சென்னை|சென்னைக்கு]], [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[உத்திரமேரூர்]] (தடம் எண் - 148) வழியாக அரைமணி நேரத்திற்கு ஒரு வீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. |
||
* போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]] மற்றும் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலைக்கு]] 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது. |
* போளூரிலிருந்து, [[வேலூர்]], [[கண்ணமங்கலம்]] மற்றும் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலைக்கு]] 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது. |
||
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சேத்துப்பட்டு]], [[தேவிகாபுரம்]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவைகள் உள்ளது. |
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[சேத்துப்பட்டு]], [[தேவிகாபுரம்]] மற்றும் [[வந்தவாசி]] ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவைகள் உள்ளது. |
||
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]], [[திருவண்ணாமலை]] வழியாக [[திருப்பூர்]], [[சேலம்]], [[திருச்சி]], [[கிருஷ்ணகிரி]], [[கோயம்புத்தூர்]], [[ஒகேனக்கல்]], [[ஈரோடு]], [[பெங்களூரு]], [[செங்கம்]], [[ஊட்டி]], [[சமுனாமரத்தூர்]] வரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன. |
* [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணியிலிருந்து]], [[திருவண்ணாமலை]] வழியாக [[திருப்பூர்]], [[சேலம்]], [[திருச்சி]], [[கிருஷ்ணகிரி]], [[கோயம்புத்தூர்]], [[ஒகேனக்கல்]], [[ஈரோடு]], [[பெங்களூரு]], [[செங்கம்]], [[ஊட்டி]], [[சமுனாமரத்தூர்]] வரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன. |
||
* [[வேலூர்|வேலூரிலிருந்து]], [[திருவண்ணாமலை]] வழியாக [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[ஆத்தூர்]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[மதுரை]], [[புதுக்கோட்டை]], [[கள்ளக்குறிச்சி]], [[விருத்தாசலம்]], [[தூத்துக்குடி]], [[கும்பகோணம்]], [[மதுரை]], [[அறந்தாங்கி]], [[மணப்பாறை]], [[திருக்கோவிலூர்]], [[செங்கம்]], [[சாத்தனூர் அணை]], [[தானிப்பாடி]], [[திருச்சி]], [[கன்னியாகுமரி]], [[பெரம்பலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருநெல்வேலி]], [[மார்த்தாண்டம்]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு வந்து செல்லும் |
* [[வேலூர்|வேலூரிலிருந்து]], [[திருவண்ணாமலை]] வழியாக [[கடலூர்]], [[புதுச்சேரி]], [[விழுப்புரம்]], [[ஆத்தூர்]], [[சிதம்பரம்]], [[பண்ருட்டி]], [[மதுரை]], [[புதுக்கோட்டை]], [[கள்ளக்குறிச்சி]], [[விருத்தாசலம்]], [[தூத்துக்குடி]], [[கும்பகோணம்]], [[மதுரை]], [[அறந்தாங்கி]], [[மணப்பாறை]], [[திருக்கோவிலூர்]], [[செங்கம்]], [[சாத்தனூர் அணை]], [[தானிப்பாடி]], [[திருச்சி]], [[கன்னியாகுமரி]], [[பெரம்பலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருநெல்வேலி]], [[மார்த்தாண்டம்]] ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு வந்து செல்லும் |
||
* [[சேலம்|சேலம்]] மற்றும் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செய்யார்]] வழியாக [[காஞ்சிபுரம்]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த போளூர் பேருந்து நிலையம் வந்து செல்லும். |
* [[சேலம்|சேலம்]] மற்றும் [[திருவண்ணாமலை|திருவண்ணாமலையிலிருந்து]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[செய்யார்]] வழியாக [[காஞ்சிபுரம்]] செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த போளூர் பேருந்து நிலையம் வந்து செல்லும். |
||
* [[பெங்களூரு]], [[மேல்மருவத்தூர்]], [[ஆற்காடு]], [[இராணிப்பேட்டை]], [[திருப்பத்தூர்]], [[திருத்தணி]] ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது. |
* [[பெங்களூரு]], [[மேல்மருவத்தூர்]], [[ஆற்காடு]], [[இராணிப்பேட்டை]], [[திருப்பத்தூர்]], [[திருத்தணி]] ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது. |
||
*[[துரிஞ்சிகுப்பம்]], [[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|சித்தேரி(துரிஞ்சிகுப்பம்)]] [[கண்ணமங்கலம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[அவலூர்பேட்டை]], [[பாடகம் ஊராட்சி|பாடகம்]], [[மன்சுராபாத் ஊராட்சி|மன்சுராபாத்]], [[அத்திமூர் வேலாங்குளத்தஞ்சியம்மன் கோயில்|அத்திமூர்]] ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது. |
*[[துரிஞ்சிகுப்பம்]], [[துரிஞ்சிகுப்பம் ஊராட்சி|சித்தேரி(துரிஞ்சிகுப்பம்)]] [[கண்ணமங்கலம்]], [[ஆதமங்கலம் புதூர்|ஆதமங்கலம்புதூர்]], [[அவலூர்பேட்டை]], [[பாடகம் ஊராட்சி|பாடகம்]], [[மன்சுராபாத் ஊராட்சி|மன்சுராபாத்]], [[அத்திமூர் வேலாங்குளத்தஞ்சியம்மன் கோயில்|அத்திமூர்]] ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது. |
||
15:28, 7 செப்டெம்பர் 2020 இல் நிலவும் திருத்தம்
போளூர் POLUR | |
|---|---|
சிறப்பு நிலை பேரூராட்சி | |
| ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| மாகாணம் | தொண்டை நாடு |
| வருவாய் கோட்டம் | ஆரணி |
| சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
| மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
| தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
| அரசு | |
| • வகை | சிறப்பு நிலை பேரூராட்சி |
| • நிர்வாகம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
| • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
| • மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத் |
| • சட்டமன்ற உறுப்பினர் | திரு.சேகரன் |
| • மாவட்ட ஆட்சியர் | திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப. |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 12.58 km2 (4.86 sq mi) |
| • பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
| ஏற்றம் | 173 m (568 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 55,278 |
| இனம் | போளூர்காரன் |
| மொழிகள் | |
| • அலுவல்மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீடு | 606803 |
| இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04181 |
| வாகனப் பதிவு | TN 97 |
| சென்னையிலிருந்து தொலைவு | 172 கி.மீ (107மைல்) |
| திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 38 கி.மீ (24மைல்) |
| வேலூரிலிருந்து தொலைவு | 53 கி.மீ (33மைல்) |
| ஆரணியிலிருந்து தொலைவு | 29 கிமீ (18மைல்) |
| வந்தவாசியிலிருந்து தொலைவு | 58 கிமீ (36மைல்) |
| சித்தூரிலிருந்து தொலைவு | 89 கிமீ (55மைல்) |
| கடலூரிலிருந்து தொலைவு | 139 கிமீ (86மைல்) |
| இணையதளம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
போளூர் (ஆங்கிலம்:Polur) இந்திய நாடு, தமிழ்நாடு மாநிலமான, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள, போளூர் வட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியம், போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலை பேரூராட்சியும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
இந்த நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியப் பகுதியிலும் மற்றும் இந்த மாவட்டத்தில் நான்காவது பெரிய நகரமாகும். இந்த நகரத்தில் விவசாயம் முக்கிய பிரதான தொழிலாக உள்ளது. இந்த நகரம் ஆரணி - செங்கம் மாநில நெடுஞ்சாலை SH133 மற்றும் கடலூர் - திருவண்ணாமலை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் - மங்களூரு NH234 தேசிய நெடுஞ்சாலை மற்றும் போளூர் - வந்தவாசி - செய்யூர் SH134 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆண்மீக நகரான திருவண்ணாமலைக்கும், பட்டு நகரான ஆரணிக்கும் அருகாமையில் அமைந்துள்ளது.
போளூர் நகரம் உருவாக்கம்
- பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் முக்கிய நகராக போளூர் விளங்கியது.
- சம்புவராயர்கள் படைவீட்டை தலைமையிடமாக கொண்டு திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, போளூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- 1989க்கு முன் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் போளூர் நகரமாக விளங்கியது
- போளூர் தொகுதியை 1951 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி முதல் தேர்தல் 1951 ஆம் ஆண்டு சந்தித்தது.
- திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் போளூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் போளூர் பேரூராட்சி மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
- 1989 ஆம் ஆண்டு வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த போளூர் பேரூராட்சி, போளூர் வட்டம் மற்றும் போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியப் பகுதிகளை திருவண்ணாமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
- 2016 ஆம் ஆண்டு வரை திருவண்ணாமலை வருவாய் கோட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் இந்த நகரம் மாற்றப்பட்டது. [2]
- அதேபோல் போளூர் (சட்டமன்றத் தொகுதி) 2007 ஆம் ஆண்டு வந்தவாசி மக்களவைத் தொகுதியின் ஒரு அங்கமாக இருந்து வந்தது. தற்போது தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வந்தவாசி மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஆரணி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு அந்த மக்களவைத் தொகுதியின் அங்கமாக போளூர் (சட்டமன்றத் தொகுதி) உள்ளது.
- போளூர் வட்டம், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் TN25 கீழ் இயங்கி வந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு செய்த மறுசீரமைப்பு காரணமாக ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உருவாக்கப்பட்டது (TN97).பின்னர் போளூர் வட்டம் இந்த ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் இயங்கி வருகிறது [3].
- திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர் தனி கல்வி மாவட்டம் ஆகும். இந்த கல்வி மாவட்டத்தை 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- போளூர் பேரூராட்சியினாது 1946 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாக உருவாக்கப்பட்டது.
- 1969 ஆம் ஆண்டு தேர்வுநிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நகரம் நகராட்சி அந்தஸ்து தகுதி இருந்தும் நகராட்சியாக மாற்றபடாமல் உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இது போளூர் தாலுக்காவின் தலைமையிடமாக உள்ளது. தினசரி தொழில் நிமத்தமாக இப்பேரூராட்சிக்கு சுமார் 50000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.[4]
பெயர்க்காரணம்
பொருளூர் என்ற சொல் காலப்போக்கில் போளூர் என மாறியது. பொருளூர் என்பது செல்வத்தின் இடம் என்று பொருள். இது தற்போது போளூர் என்று அழைக்கப்படுகிறது. [5]. இங்கிருந்து திருவண்ணாமலை மற்றும் ஆரணி நகரை அரைமணி நேரத்திலும் மற்றும் வேலூருக்கு வெறும் ஒரு மணி நேரத்தில் அடையலாம். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
அமைவிடம்
கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் வழித்தடத்தில் அமைந்த போளூர் நகரத்திற்கு தெற்கே திருவண்ணாமலை 38 கிமீ; வடக்கே வேலூர் 52 கிமீ; தென்கிழக்கே ஆரணி 29 கிமீ; கிழக்கே சேத்துப்பட்டு 28 கிமீ மற்றும் மேற்கே சமுனாமரத்தூர் 48 கிமீ தொலைவில் உள்ளது.தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 171 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.58 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 86 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி போளூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 13,706 வீடுகளும், போளூர் நகர மக்கள் தொகை 55274 மக்கள்தொகையும் கொண்டது. இவற்றில் ஆண்கள் 25637 பேரும், பெண்கள் 29637 பேரும் உள்ளன. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 82.87% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1029 பெண்கள் வீதம் உள்ளனர்.[7]
| ஆண்டு | ம.தொ. | ±% |
|---|---|---|
| 1901 | 9,767 | — |
| 1911 | 9,946 | +1.8% |
| 1921 | 12,330 | +24.0% |
| 1931 | 13,098 | +6.2% |
| 1941 | 13,967 | +6.6% |
| 1951 | 15,212 | +8.9% |
| 1961 | 16,441 | +8.1% |
| 1981 | 23,462 | +42.7% |
| 1991 | 30,196 | +28.7% |
| 2001 | 41,376 | +37.0% |
| 2011 | 55,278 | +33.6% |
| Sources: | ||
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 171 மீட்டர் (561 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது
பொருளாதாரம்
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, போளூர் நகர தொழிலாளர் பங்கு விகிதம் 35.50% ஆகும். போளூர் வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி குறைவாகவே கொண்டுள்ளது. அரிசி தொழிற்சாலை, பட்டுப்புடவை, விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அன்றாட வேலைக்காக சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், திருச்சி போன்ற இடங்களுக்கு இங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்து வேலை செய்கின்றனர்
சிறப்புகள்
போளுரின் மலையில் உள்ள கோயிலின் சிறப்பே போளுரின் சிறப்பாக அமைகிறது. இது சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலைக்கு, வேலூர் மற்றும் ஆரணியிலிருந்து வர வேண்டுமானால் போளூர் வழியாகதான் வர வேண்டும்.போளுரின் அமைவிடம் வட தமிழகம் ஆகும். போளூரில் விட்டோபா சுவாமிகள் மடம் உள்ளது இது விட்டோபா சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ள இடமாகும். அதன் அருகில் போலாட்சி அம்மன் கோவில் உள்ள்து. போளூர் மலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சன்னதி அமைந்துள்ளது.
இது சுயம்பு வடிவம் ஆனது.
நிர்வாகம் மற்றும் அரசியல்
இந்நகரம் சிறப்பு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. போளூர் நகரம்,தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாகும். இந்த பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்த நகரை போளூர் பேரூராட்சியின் நிர்வாகம் மூலம் தூய்மைப்படுத்துகிறது.
| பேரூராட்சி அதிகாரிகள் | |
|---|---|
| தலைவர் | |
| ஆணையர் | |
| தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் | |
| சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
| சட்டமன்ற உறுப்பினர் | திரு.கே.வி.சேகரன் |
| மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
| மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத் |
அரசியல்
- தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் போளூர் தொகுதி ஒன்றாகும். போளூர் பேரூராட்சியானது, போளூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
- 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த திரு. கே.வி.சேகரன் வென்றார்.
வருவாய் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் போளூர் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தில் 111 வருவாய் கிராமங்களும், 2,51,655 மக்கள் தொகையும் கொண்டது. இந்த வட்டத்தில் போளூர் பேரூராட்சி மற்றும் போளூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்துள்ளது. இந்த வட்டம் ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் உள்ள வருவாய் வட்டமாகும்.
போக்குவரத்து
சாலை வசதிகள்

போளூர் நகரை பொறுத்தவரை கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, மற்றும் சித்தூர், திருப்பதி, வேலூர், குடியாத்தம், மங்களூர் ஆகிய நகரங்களை இணைக்கும்தேசிய நெடுஞ்சாலை 234 உம் மற்றும் மாநில நெடுஞ்சாலை 9 உம் இந்நகரின் வழியாக செல்கிறது. அதுமட்டுமின்றி, செங்கம், சேலம் , மற்றும் ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 43 சாலையும் மற்றும் சேத்துப்பட்டு, வந்தவாசி, செய்யூர் மற்றும் சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 115 உம் இந்நகரின் வழியாக செல்கிறது.
- மாநில நெடுஞ்சாலை NH38 - கடலூர் - திருவண்ணாமலை - வேலூர் - சித்தூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை NH234 - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - வேலூர் - மங்களூரு
- மாநில நெடுஞ்சாலை SH234A - சேலம் மாநகரம் - பாப்பிரெட்டிப்பட்டி - அரூர் - தண்டராம்பட்டு - காஞ்சி - திருவண்ணாமலை - கலசப்பாக்கம் - போளூர் - களம்பூர் - ஆரணி சாலை
- மாநில நெடுஞ்சாலை SH134 - போளூர் - சேத்துப்பட்டு - வந்தவாசி - மேல்மருவத்தூர் - செய்யூர் சாலை
- மாநில நெடுஞ்சாலை SH133 - செங்கம் - போளூர் - ஆரணி சாலை
- மாவட்ட சாலை - போளூர் - சமுனாமரத்தூர் சாலை
- மாவட்ட சாலை - போளூர் - கட்டிப்பூண்டி - துரிஞ்சிகுப்பம் சாலை
- மாவட்ட சாலை - போளூர் - தேவிகாபுரம்- அவலூர்பேட்டை சாலை
ஆகிய சாலைகள் போளூர் நகரத்தை இணைக்கும் முக்கிய சாலைகளாகும்.
பேருந்து சேவைகள்
போளூர் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கிமீ தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் ஆரணி , கண்ணமங்கலம், புதுப்பாளையம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் அவலூர்பேட்டை உடனும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் திருவண்ணாமலை செல்லவேண்டும் என்றால் தேசிய நெடுஞ்சாலை 234 வழியாக தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளது.
- மாநில தலைமையிடமான சென்னைக்கு, போளூரிலிருந்து, ஆரணி, ஆற்காடு, பூவிருந்தவல்லி (தடம் எண் - 202 UD மற்றும் 204 UD) வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளது.
- மாநில தலைமையிடமான சென்னைக்கு, சேத்துப்பட்டு, வந்தவாசி, உத்திரமேரூர் (தடம் எண் - 148) வழியாக அரைமணி நேரத்திற்கு ஒரு வீதம் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
- போளூரிலிருந்து, வேலூர், கண்ணமங்கலம் மற்றும் திருவண்ணாமலைக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்து வசதிகள் உள்ளது.
- ஆரணி, சேத்துப்பட்டு, தேவிகாபுரம் மற்றும் வந்தவாசி ஆகிய நகரங்களுக்கு 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து சேவைகள் உள்ளது.
- ஆரணியிலிருந்து, திருவண்ணாமலை வழியாக திருப்பூர், சேலம், திருச்சி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், ஒகேனக்கல், ஈரோடு, பெங்களூரு, செங்கம், ஊட்டி, சமுனாமரத்தூர் வரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் இங்கு நின்று செல்கின்றன.
- வேலூரிலிருந்து, திருவண்ணாமலை வழியாக கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், ஆத்தூர், சிதம்பரம், பண்ருட்டி, மதுரை, புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், தூத்துக்குடி, கும்பகோணம், மதுரை, அறந்தாங்கி, மணப்பாறை, திருக்கோவிலூர், செங்கம், சாத்தனூர் அணை, தானிப்பாடி, திருச்சி, கன்னியாகுமரி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, மார்த்தாண்டம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகள் இங்கு வந்து செல்லும்
- சேலம் மற்றும் திருவண்ணாமலையிலிருந்து, ஆரணி, செய்யார் வழியாக காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் இந்த போளூர் பேருந்து நிலையம் வந்து செல்லும்.
- பெங்களூரு, மேல்மருவத்தூர், ஆற்காடு, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருத்தணி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
- துரிஞ்சிகுப்பம், சித்தேரி(துரிஞ்சிகுப்பம்) கண்ணமங்கலம், ஆதமங்கலம்புதூர், அவலூர்பேட்டை, பாடகம், மன்சுராபாத், அத்திமூர் ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
ரயில் போக்குவரத்து
போளூரில் ஒரு ரயில் நிலையமும் உள்ளது. புதுச்சேரி - விழுப்புரம் - திருவண்ணாமலை - போளூர் - ஆரணி ரோடு - வேலூர்-காட்பாடி - திருப்பதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இங்கு தினசரி மற்றும் வாரந்திர ரயில்கள் மற்றும் அனைத்து ரயில்களும் இந்த போளூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
| வண்டியின் பெயர் | வண்டி எண் | புறப்படும் இடம் | சேருமிடம் |
|---|---|---|---|
| திருப்பதி விழுப்புரம் பயணிகள் வண்டி | 56885 | திருப்பதி | விழுப்புரம் |
| விழுப்புரம்- காரக்பூர் விரைவு வண்டி | 22603 | விழுப்புரம் | திருப்பதி |
| விழுப்புரம் காட்பாடி பயணிகள் வண்டி | 56886 | விழுப்புரம் | காட்பாடி |
| காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி | 56881 | காட்பாடி | விழுப்புரம் |
| விழுப்புரம்-திருப்பதி | 56882 | விழுப்புரம் | திருப்பதி |
| காட்பாடி-விழுப்புரம் | 56883 | காட்பாடி | விழுப்புரம் |
| காட்பாடி-விழுப்புரம் | 56884 | காட்பாடி | விழுப்புரம் |
| புருலியா SF விரைவு வண்டி | 22606 | விழுப்புரம் | புருலியா |
| பாமணி SF விரைவு வண்டி | 17407 | திருப்பதி | மன்னார்குடி |
| காரக்பூர் விரைவு வண்டி | 22604 | புதுச்சேரி | காரக்பூர் |
| சாலுக்யா விரைவு வண்டி | 11005 | மும்பை தாதர் சென்ட்ரல் | புதுச்சேரி |
| புதுச்சேரி-திருப்பதி வாரந்திர விரைவு வண்டி | 17414 | புதுச்சேரி | திருப்பதி |
| ஆரணி-கடலூர் பயணிகள் வண்டி | 12694 | ஆரணி | கடலூர் |
| சாலுக்யா விரைவு வண்டி | 11006 | புதுச்சேரி | பெங்களூரு |
மேற்கோள்கள்
- ↑ "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. Retrieved 21 June 2017.
- ↑ ஆரணி வருவாய் கோட்டத்தின் கீழ் போளூர் வட்டம்
- ↑ ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை
- ↑ போளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ போளூர் பெயர் காரணம்
- ↑ போளூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Polur Population Census 2011
- ↑ 8.0 8.1 "Population Details". Tiruvannamalai municipality. 2011. Archived from the original on 27 February 2014. Retrieved 2012-12-29.
- ↑ "Polur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)