அ. வரதராசன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sukanthi பயனரால் செய்யப்பட்ட 11:27, 12 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''அ. வரதராசன்''' (''Appajee Varadarajan'', பிறப்பு: ஆகத்து 17, 1920 - இறப்பு: அக்டோபர் 15, 2009<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/bench-mourns-demise-of-former-judge/article165037.ece Bench mourns demise of former judge, தி இந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

அ. வரதராசன் (Appajee Varadarajan, பிறப்பு: ஆகத்து 17, 1920 - இறப்பு: அக்டோபர் 15, 2009[1]) இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.[2] தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகத்தில் பிறந்தவர். இந்திய உச்ச நீதிமன்றத்தில் அமர்த்தப்பட்ட முதல் தலித் நீதிபதி இவரே ஆவார்.[3]

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிப் பள்ளியிலும் வேலூர் ஊரிசுக் கல்லூரியிலும் பின்னர் சென்னை சட்டக் கல்லூரியிலும் கல்வி பயின்ற வரதராசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பதிவு செய்து தம் தொழிலைத் தொடங்கினார். மாவட்ட முனிசீப், உதவி நீதிபதி எனப் படிப்படியாக உயர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக 1974 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் அமர்த்தப்பட்டார். இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக வரதராசன் 1980 பிப்பிரவரி 10 இல் அமர்த்தப்பட்டார். அவர் 1985 ஆகத்து 16 இல் ஒய்வு பெற்றார்.

சான்றாவணம்

"https://tamilar.wiki/w/index.php?title=அ._வரதராசன்&oldid=110439" இலிருந்து மீள்விக்கப்பட்டது