சங்கானை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiagalingam பயனரால் செய்யப்பட்ட 13:31, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''சங்கானை''' நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது. '''சங்கானை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
Jump to navigation Jump to search

சங்கானை நகரம், இலங்கையின் யாழ் நகரத்திலிருந்து 12 கிமீ வடமேற்காக அமைந்துள்ளது.

சங்கானை யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாம வலய பிரிவில், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவின் தலைமையிடமாகவும் இது உள்ளது. இவ்வூரின் வடக்கு எல்லையில் வடலியடைப்பு, பிரான்பத்தை, பண்டத்தரிப்பு ஆகிய ஊர்களும், கிழக்கு எல்லையில் சண்டிலிப்பாய், மானிப்பாய் ஆகிய ஊர்களும், தெற்கில் சங்கரத்தையும், மேற்கில் சித்தங்கேணி, வட்டுக்கோட்டை என்பனவும் உள்ளன.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் மிகப் பழைய காலத்திலிருந்தே இயங்கும் பாரம்பரியச் சந்தை வலையமைப்பில், ஒரு சந்தை, (சங்கானை சந்தை என பிரபலமாக அழைக்கப்படும் சந்தை இங்கு) அமைந்துள்ளது. டொரொண்டோவில் (கனடா) குடியேறிய தமிழ் சமூகம் சங்கானை என்ற பெயரில் ஒரு சந்தையை திறந்துள்ளமை இங்கு குறிப்படத்தக்கது.

சங்கானையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒல்லாந்தர் கோட்டை அமைந்திருப்பது சிறப்புடையதாகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=சங்கானை&oldid=122031" இலிருந்து மீள்விக்கப்பட்டது