கிராபீன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Almighty34 பயனரால் செய்யப்பட்ட 02:20, 1 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
கிராபீனின் தேன்கூட்டையொத்த அணிக்கோவை

கிராபீன் (Graphene) என்பது கரி அல்லது கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்று. மற்றொன்று வைரம். இது வலைப்பின்னல் போன்ற, அறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டுள்ள கரிம அணுக்களாலான, மெல்லிய தாளையொத்த பொருள். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட இரு-பரிமாணப் பொருள் எனலாம்.[1] கிராபீனின் தடிமன் ஒரு-அணு அளவையொத்தது. இதிலுள்ள கரிம அணுக்கள் sp2 இணைப்பில் உருவானவை; இதன் வேதிச் சமன்பாடு C62H20.[2]

கண்டுபிடிப்பு

கிராபீன் ஆண்ட்ரே கேம், கான்ஸ்ட்டாண்டின் நோவாசெலோவ் ஆகியோரால் முதன்முதலில் கிராபைட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது; இச்செயலுக்காகவும் கிராபீனைப் பற்றிய இயற்பியலை விளக்கியதற்காகவும் இவர்களிருவருக்கும் இயற்பியல் நோபல் பரிசு 2010-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

பென்சில் கரியிலிருந்து கிராபீன்

கேமும் நோவாசெலோவும் பென்சில் கரியின் மேல் தெரியொட்டு நாடாவை (sellotape) மீண்டும் மீண்டும் ஒற்றி எடுப்பதன் மூலம் கிராபைட்டை செதில் செதிலாக்கினர்; ஆனால், அதன் தடிமன் அதிகமாகவே இருந்ததால், அச்செதில்களை ஆக்சிசனேற்றப்பட்ட சிலிக்கான் தளத்தின் மேல் வைத்து மீண்டும் ஒற்று வேலையைச் செய்ததன் மூலம் இறுதியில் கிராபீனைப் பிரித்தெடுத்தனர்.[3]

கிராபீனின் சில வியத்தகு சிறப்பியல்புகள்

  • உலகிலேயே மிகவும் மெல்லிய பொருளான கிராபீன், உலகிலேயே மிகவும் உறுதியான பொருளும் கூட! (எஃகை விட இது 100 மடங்கு உறுதியானது) [1]
  • ஒரு மில்லிமீட்டர் தடிமனுள்ள கிராபைட்டில் மூன்று மில்லியன் கிராபீன் அடுக்குகளை வைக்க முடியும்; அவ்வளவு மெலிதான பொருள் இது.[3]
  • இது தாமிரத்தையொத்த மின்கடத்துத் தன்மை கொண்டது; இதன் வழியாகப் பாயும் மின்னோட்டம் மிகச்சிறியளவு ஆற்றலையே இழப்பதாலும் கட்டமைப்பதற்கு எளியதாக இது இருப்பதாலும் தொகுப்புச் சுற்றுகள் உருவாக்குவதில் எதிர்காலத்தில் கிராபீன் பெருமளவு பங்களிக்கக் கூடும்.
  • கிராபீனைக் கொண்டு சுழிப்பரிமாணப் பொருளான ஃபுல்லரீன், ஒரு-பரிமாணப் பொருளான கரிம நேனோகுழாய், முப்பரிமாணப் பொருளான கிராபைட் ஆகியவற்றை உருவாக்க இயலும்.
  • ஏறக்குறைய முழுமையான ஒளி-ஊடுருவுந் தன்மையுடன் இருந்தாலும், இது மிகுந்த அடர்த்தி கொண்டுள்ளதால், மிகச்சிறிய அணுவான ஒரு ஈலியம் அணு கூட இதனுள் ஊடுருவ முடியாது.

தனிச்சிறப்புடைய மின்கடத்துத் தன்மை

கிராபீனின் தனிச்சிறப்பு வாய்ந்த மின்கடத்துத் தன்மை இரு விதங்களில் ஆராயப்படுகிறது:

  • இதிலுள்ள கார்பன் அணுக்கள் மிகவும் நேர்த்தியுடன் அணிக்கோவையில் அமைக்கப் பெற்றுள்ளதால், இதனூடே செல்லும் இலத்திரன்களால் எந்தவிதத் தொந்தரவுமின்றி (மோதல்கள் ஏற்படாமல்) நீண்ட தொலைவு செல்ல முடியும்; இயல்பான கடத்திகளில் பாயும் எலக்ட்ரான்கள் பல மோதல்களுக்கு உட்படுவதால் கடத்தியின் செயல்பாடு மந்தப்படுகின்றது.
  • இதில் பாயும் எலக்ட்ரான்கள் ஒளித்துகளான போட்டானைப் போன்று செயல்படுகின்றன; அதாவது, கிட்டத்தட்ட நிறையற்ற துகளைப் போல. இதனால், மிகப்பெரிய துகள் முடுக்கிகள் பெரும் ஆற்றலைச் செலவிட்டு செய்யக்கூடிய வேலையை கிராபீனால் மிக எளிதில் செய்ய முடியலாம்.[3]

மேலும் காண்க

  • கிராபீனை உருவாக்கலாம் வாருங்கள்! ( சயண்ட்டிபிக் அமெரிக்கன் [1] )

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 ஃபைசார்கு.காம்
  2. "வேர்டைக்யூ.காம்". Archived from the original on 2010-08-17. Retrieved 2010-10-06.
  3. 3.0 3.1 3.2 "நோபல்பரிசு.ஆர்க்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-10. Retrieved 2010-10-08.
"https://tamilar.wiki/w/index.php?title=கிராபீன்&oldid=327321" இலிருந்து மீள்விக்கப்பட்டது