ஆள்கூறுகள்: 27°59′0″N 94°40′0″E / 27.98333°N 94.66667°E / 27.98333; 94.66667

பசர்

தமிழர்விக்கியிலிருந்து
76.32.47.150 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 18:44, 8 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பசர்

மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி
இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் பசரின் அமைவிடம்
பசர் is located in இந்தியா
பசர்
பசர்
பசர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°59′0″N 94°40′0″E / 27.98333°N 94.66667°E / 27.98333; 94.66667
நாடு இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்லெபா ராதா மாவட்டம்
ஏற்றம்
578 m (1,896 ft)
மொழி
 • அலுவல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
791101
தொலைபேசி குறியீடு03795
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுAR25
அருகமைந்த நகரம்அலோங்

பசர் (Basar), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள லெபா ராதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 256 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது. இவ்வூரில் காலோ பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து 578 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனருகே அமைந்த நகரம் அலோங் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,064 குடும்பங்கள் கொண்ட பசர் பேரூராட்சியின் மக்கள் தொகை 4,284 ஆகும். . இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.25% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 880 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 87.77% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 60.04 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் 35.29%, இந்து சமயத்தினர் 34.80%, இசுலாமியர் 3.66%, பௌத்தர்கள் 1.12%, கிறித்தவர்கள் 24.88%, சீக்கியர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.23 % வீதம் உள்ளனர். [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பசர்&oldid=421831" இலிருந்து மீள்விக்கப்பட்டது