ஆள்கூறுகள்: 11°32′33″N 78°14′28″E / 11.54250°N 78.24111°E / 11.54250; 78.24111

போதமலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 15:44, 13 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (நிர்வாகம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
போதமலை
உயர்ந்த புள்ளி
உயரம்1,100 m (3,600 அடி)
ஆள்கூறு11°32′33″N 78°14′28″E / 11.54250°N 78.24111°E / 11.54250; 78.24111
பரிமாணங்கள்
நீளம்19.3121 km (12.0000 mi) E-W
அகலம்9.3342 km (5.8000 mi) N-S
பரப்பளவு180.2632 km2 (69.6000 sq mi)
பெயரிடுதல்
பெயரின் மொழிதமிழ்
புவியியல்
அமைவிடம்வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், இராசிபுரம் வட்டம்
மூலத் தொடர்கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
Biomeமலைக்காடு

போதமலை (Bodhamalai) என்பது தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும்.[1]

புவியியல்

போதமலை என்பது கொல்லி மலையின் ஒரு கிளை ஆகும். இது கிழக்கு-மேற்குத் திசையில் ஜாருகு மற்றும் கொல்லி மலைகளுக்கு இடையில் 12 கி. மீ. தொலைவில் உள்ளது. இதன் உயரம் 800 மீட்டர் முதல் 1200 மீட்டர் வரை இருக்கும்.[2]

கீழூர், மேலூர், கெட்டமலை ஆகியவை போதமலை மலைப்பகுதிகளில் சில ஆகும்.[3] போதமலை என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும்.[4] போதமலைக்கு தெற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் கொல்லி மலை அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் ஏற்காடு அல்லது சேர்வராயன் மலைகள் போதமலையிலிருந்து வடக்கே எழுபது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போதமலைக்கு தெற்கே இருபது கிலோமீட்டர் தொலைவில் அருகிலுள்ள நகரம் இராசிபுரம் ஆகும்.சேலம், போதமலையிலிருந்து வடக்கே நாற்பத்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல், போதமலையிலிருந்து தெற்கே நாற்பத்தெட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேட்டாலா, போதமலையிலிருந்து கிழக்கே இருபத்தி ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெண்ணந்தூர் போதமலைக்கு மேற்கே முப்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[5] இங்கு மலைவாழ் பழங்குடியினர் மிகக் குறைவாகவே வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் கொல்லி மலையிலிருந்து இடம்பெயர்ந்து இங்கு வாழ்கின்றனர். இப்பகுதியில் பேருந்து வசதி இல்லை. நடந்தே செல்ல வேண்டும்.[6]

மூலிகைத் தாவரங்கள்

போதமலை பகுதியில் பல வகையான மூலிகைத் தாவரங்கள் வளர்கின்றன. உள்ளூர் மக்கள் மூலிகைத் தாவரங்களின் இலை, வேர், கிழங்கு, தண்டு, மூலிகை தாவரத்தின் மேலோடு ஆகியவற்றை விற்கிறார்கள்.[7]

மக்கள்தொகை

பழங்குடியினர் கீழூர், மேலூர், கேதமலை குக்கிராமங்களில் வாழ்கின்றனர். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இவர்களின் முக்கிய தொழிலாகும்.[2]

நிர்வாகம்

இப்பகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இராசிபுரம் வட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.[2]

மேற்கோள்கள்

  1. "ஒரு மலைக்கிராமம்". www.jeyamohan.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-12-04.
  2. 2.0 2.1 2.2 "Collector treks to inspect polling centres". The New Indian Express. https://www.newindianexpress.com/states/tamil-nadu/2011/mar/13/collector-treks-to-inspect-polling-centres-235072.html. 
  3. "போதமலை மலைவாழ் மக்களுக்கு பலவகை மரக்கன்று வழங்கப்படுமா?". Dinamalar. https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-namakkal/news/2055623. 
  4. "Development | Namakkal District, Government of Tamilnadu | Land of Poultry, Transport". namakkal.nic.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-12-04.
  5. "Bodha Malai". Bodha Malai (in ஆங்கிலம்). Retrieved 2018-12-04.
  6. "Travel guide". Retrieved 4 December 2018.
  7. http://www.wjpr.net/download/article/1410852071.pdf
"https://tamilar.wiki/w/index.php?title=போதமலை&oldid=453621" இலிருந்து மீள்விக்கப்பட்டது