மங்கல இசை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Alangar Manickam பயனரால் செய்யப்பட்ட 03:43, 5 பெப்பிரவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:தவில் நாதஸ்வரம் கச்சேரி.svg
மங்கல இசை

மங்கல இசை என்பது தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் போன்ற தமிழர் வாழும் நாடுகளில் நாகசுரம் மற்றும் தவில் கருவிகளுடன் வழங்கப்படும் இசையாகும். தமிழர் இல்லங்களிலும், தமிழர் சமூக வழிபாட்டிலும், கோயில் தெய்வ வழிபாடுகளிலும் இவ்விசை முக்கியப் பங்கு பெறுவதாலும், மங்கல காரணமான செயற்பாடுகளில் முக்கியப் பங்கு பெறுவதாலும் இதனை மங்கல இசை என்பர். மங்கள இசை துர்தேவதைகளை விரட்டிவிடும் என்ற நம்பிக்கை உண்டு.[1] தமிழர் குடும்பங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா, புகுமனை புகுதல் போன்ற இல்லற நிகழ்ச்சிகளின் பொழுதும், சமுதாய விழாக்களில் தொடக்க நிகழ்ச்சியாகவும், கோயில் வழிபாடுகளிலும் இவ்விசை விளங்குவதால் இதனை மங்கல இசை என்று அழைக்கின்றனர். [2]

மங்கலம் என்ற சொல் ஆக்கம், பொலிவு, நற்செயல், திருமணம், அறம், வாழ்த்து, சுபம் போன்ற பொருள்களில் கையாளப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. லயவேட்டைக்காரர் 'பத்மஸ்ரீ' அரித்துவாரமங்கலம் கி. ரி. பழனிவேல் பேட்டி..! சந்திப்பு: கே. வி. ராகவன், நூல்: பேசும் புதிய சக்தி நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்: எஸ் செந்தில்குமார், பதிப்பு: 2018, பேசும் புதியசக்தி பதிப்பகம், எண்: 29எச், ஏ.என்.ஆர். காம்ப்ளக்ஸ் தெற்கு வீதி, திருவாரூர். பக்கம்: 12-18
  2. மங்கல இசை

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மங்கல_இசை&oldid=456266" இலிருந்து மீள்விக்கப்பட்டது