விட்டலர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 15:42, 1 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
விட்டலர்
பாண்டுரங்கன்
பண்டரிநாதன்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பணடரிபுரம் விட்டலர் கோயிலில் விட்டலரின் திருவுருவச் சிலை
தேவநாகரிविठोबा
வகைகிருட்டிணன் வடிவம்
இடம்பண்டரிபுரம்
துணைருக்மணி

விட்டலர், விதோபர், அல்லது பாண்டுரங்கன், இந்து சமயத்தினரின் வைணவ சமயக் கடவுளான கிருஷ்ணர் ஆவார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில், பந்தர்ப்பூர் எனும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் புகழ்பெற்ற பண்டரிபுரம் விட்டலர் கோயிலிலின் மூலவர் பகவான் விட்டலர் ஆவார். மராத்திய மொழியில் விட்டலர் என்பதற்கு செங்கல் என்று பொருள்.

விட்டலர் வரலாறு

மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர், சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணி, புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான் கிருஷ்ணன். அங்கு மழை பெய்து, சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே, தனது பெற்றோர் சேவையை முடித்துக்கொண்டு புண்டரீகன் அவர்களை அண்டி, வரவேற்றான். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத ருக்மிணி, வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைப் போட்டு உடைத்தாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணன் புன்னகைத் தான். 'உன் மாதா, பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள்' என்றான். பாண்டுரங்கனே! நீ எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்கவேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும்' என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். (மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள்). இதனால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயராயிற்று.

விட்டலரின் அடியவர்கள்

விட்டலர் பக்தர்களில் பெரும்பாலானோர் மகாராட்டிரம், கர்நாடகம், கோவா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை சேந்தவர்கள் ஆவார். பாண்டுரெங்க விட்டலரைக் குறித்து அபங்கம் பாடியர்களில் ஞானேஷ்வர், நாமதேவர், துக்காராம், ஏகநாதர், ஜனாபாய், சக்குபாய், சோகாமேளர் ஆகியவர்கள் அறியப்படுகின்றனர்.[1]

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்



"https://tamilar.wiki/w/index.php?title=விட்டலர்&oldid=497628" இலிருந்து மீள்விக்கப்பட்டது