ஹலோ எப். எம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 02:31, 23 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஹலோ எப்.எம் (106.4 MHz, Hello FM) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபரப்படும் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது சென்னையைச் சேர்ந்த மலர் பதிப்பகம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.[1] அதிர்வெண் பட்டை 106.4 MHz ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.[2] 2006 ஆம் ஆண்டு முதல் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது. 2007 ஆம் ஆண்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடியிலும் இதன் சேவையை விரிவுப்படுத்தியது.

இருப்பிடங்கள்

  • சேலம் 91.5 MHZ
  • தூத்துகுடி 106.4 MHZ
  • திருச்சி 106.4 MHZ
  • திருநெல்வேலி 106.4 MHZ
  • சென்னை 106.4 MHZ
  • கோயம்புத்தூர் 106.4 MHZ
  • மதுரை 106.4 MHZ
  • புதுச்சேரி 106.4 MHZ
  • ஈரோடு 92.7 MHZ
  • வேலூர் 91.5 MHZ
  • துபாய் 106.5 MHz

மேற்கோள்கள்

வெளிப்புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஹலோ_எப்._எம்&oldid=507252" இலிருந்து மீள்விக்கப்பட்டது