அரியல்லூர்
அரியல்லூர் | |
|---|---|
கணக்கெடுப்பு ஊர் | |
| ஆள்கூறுகள்: 11°29′51″N 75°43′12″E / 11.4974200°N 75.7199600°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | மலப்புறம் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 18,987 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 676312 |
| வாகனப் பதிவு | KL-65 |
அரியல்லூர் (Ariyallur) என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊர் ஆகும்.[1] இது வள்ளிக்குன்னு ஊராட்சியிலும், புதிதாக உருவாக்கப்பட்டது வள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது.[2]
மக்கள்தொகை
2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, அரியல்லூரின் மொத்த மக்கள் தொகை 18,987 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 9,164 என்றும், பெண்களின் எண்ணிக்கை 9,823 என்றும் உள்ளது.[1] இங்கு இந்துகள் பெரும்பான்மையினராக உள்ளனர்.
போக்குவரத்து
அருகிலுள்ள வானூர்தி நிலையம் உள்ளது கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள முக்கிய தொடருந்து நிலையம் வல்லிக்குன்னுவில் உள்ளது.
குறிப்பிடத்தக்க இடங்கள்
வள்ளிக்குன்னு தொடருந்து நிலையம் அரியல்லூரில் அமைந்துள்ளது. இங்கு எம். வி. மேல்நிலைப்பள்ளி, ஜி. யு. பி பள்ளி ஆகிய பள்ளிகள் அமைந்துள்ளன. அரியலூர் வேளாண் நாற்றுப் பண்ணைகளுக்குப் பிரபலமானது. இது சுமார் 4 கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்த கடற்கரையில் முத்தியாம் ஆமைகள் உய்விடம் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2008-12-08. Retrieved 2008-12-10.
- ↑ "അരിയല്ലൂർ പരപ്പാൽ ബീച്ചിൽ കടലാക്രമണം". ManoramaOnline (in மலையாளம்).
