அல்துபைட்டு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அல்துபைட்டு
Althupite
படிமம்:Althupite.jpg
உலகளவில் அறியப்பட்ட மிகவும் அரிதான Th-U கனிமமான அல்துபைட்டின் மஞ்சள் படிகங்கள். பெல்ச்சியத்தின் அருங்காட்சியக சேகரிப்பு.
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுAlTh(UO2)7(PO4)4O2(OH)5·15H2O
இனங்காணல்
நிறம்மஞ்சள்
விகுவுத் தன்மைநெகிழ்வுத்தன்மை கொண்டது
மோவின் அளவுகோல் வலிமை3.5-4
மிளிர்வுபளபளக்கும், துணை பளபளப்பு
கீற்றுவண்ணம்மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி3.91
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்

அல்துபைட்டு (Althupite) என்பது AlTh(UO2)7(PO4)4O2(OH)5·15H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். அரியவகை அலுமினியம் தோரியம் யுரேனைல் பாசுப்பேட்டுக் கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. பெக்மாடைட்டு என்ற தீப்பாறை வகையிலிருந்து இக்கனிமம் கிடைக்கிறது. அலுமினியம், தோரியம், யுரேனியம் மற்றும் பாசுப்பரசு ஆகிய தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களிலிருந்து அல்துபைட்டு என்ற பெயர் பெறப்பட்டுள்ளது[1][2][3]. பன்னாட்டு கனிமவியல் சங்கம் அல்துபைட்டு கனிமத்தை App என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. Piret P. and Deliens M. 1987: Les phosphates d'uranyle et d'aluminium de Kobokobo. IX. L'althupite AlTh(UO2)[(UO2)3O(OH)(PO4)2]2(OH)3•15H2O, nouveau minéral; propriétés et structure cristalline. Bulletin de Mineralogie, 110, 65-72
  2. http://www.mindat.org/min-149.html Mindat
  3. http://rruff.geo.arizona.edu/doclib/hom/althupite.pdf Handbook of Mineralogy
"https://tamilar.wiki/w/index.php?title=அல்துபைட்டு&oldid=258132" இலிருந்து மீள்விக்கப்பட்டது