ஊர் (கண்டம்)
ஊர் (Ur) பழம்பாறை பேரூழிக் காலத்தில் 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான மீப்பெரும் கண்டம் ஆகும்;[1] இதுவே புவியின் மிகப்பழமையான கண்டமாகக் கருதப்படுகின்றது. ஆர்க்டிக்காவைவிட அரை பில்லியன் ஆண்டுகள் முன்னதாகத் தோன்றியுள்ளது. ஆனால் மற்றொரு மீப்பெரும் கண்டமான வால்பரா இதற்கு முன்னதாக, 3600/3100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக, உருவாகியிருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.[2]
1000 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் இது நெனாவுடனும் அட்லாண்டிக்காவுடனும் இணைந்து ரோடீனியா மீப்பெரும் கண்டமாக உருவானது. ஓர் பிரிபடாத நிலப்பகுதியாக இருந்து வந்த ஊர் பாஞ்சியா லோரேசியாவாகவும் கோண்டுவானாவாகவும் உடைந்தபோது இதுவும் பிரிபட்டது.[3]
உருவாக்கமும் பிளவுபடலும்
ஊர் கண்டத்து பாறைகள் தற்கால ஆப்பிரிக்கா, ஆஸ்திரலேசியா, இந்தியத் துணைக்கண்டம் என்ற இந்த முன்று நிலப்பகுதிகளின் அங்கங்களாக உள்ளன.[3]
ஊர் உருவான காலத்தில் புவிப்பரப்பில் இருந்த ஒரே கண்டமாக அது இருந்திருக்கலாம்; தற்கால ஆஸ்திரலேசியாவை விட சிறியதாக இருந்திருக்கலாம் என்றாலும் இது ஒரு மீப்பெருங்கண்டமாக கருதப்படுகின்றது. புவிப்பரப்பில் ஊர் ஒரே கண்டமாக இருந்தபோது மற்ற நிலப்பகுதிகள் சிறுசிறு பாறைத் தீவுகளாக இருந்திருக்கலாம். எனவே இவை கண்டங்களாகக் கருதப்படவில்லை.
காலக்கோடு
- ~3.1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், புவியின் மீதான ஒரே கண்டமாக ஊர் உருவானது.
- ~2.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கேனோர்லாந்து என்ற மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், கொலம்பியாவின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், ரோடீனியா என்ற மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், பனோசியா என்ற மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பாஞ்சியா என்ற மீப்பெருங்கண்டத்தின் அங்கமாக ஊர் இருந்தது.
- ~208 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊர் பாஞ்சியாவில் இருந்து கோண்டுவானாவின் அங்கங்களாக பிரிந்தது.
- ~66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஊரின் ஆப்பிரிக்கப் பகுதி ஊரின் இந்திய துணைக்கண்டத்தின் பகுதியில் இருந்து இறு பகுதிகளின் அங்கமாக பிரிந்தது மற்றும் ஊரின் தென் அமெரிக்கப் பகுதி ஊரின் அண்டார்டிகப் பகுதியில் இருந்து இறு பகுதிகளின் அங்கமாக பிரிந்தது மற்றும் ஊரின் ஆஸ்திரேலேசியப் பகுதியும் இதில் இருந்து பிரிந்து சென்றது.
- ~இன்று, ஊர் ஆஸ்திரலேசியா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் அந்தாட்டிக்கா மற்றும் தென் அமெரிக்கா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் என இந்த அனைத்து கண்டங்களின் அங்கமாகும்.
மேற்சான்றுகள்
- ↑ Zubritsky, Elizabeth. "In the beginning, there was Ur". Endeavors. University of North Carolina at Chapel Hill. Retrieved 28 June 2015.
- ↑ Lerner & Lerner 2003
- ↑ 3.0 3.1 Zubritsky 1997
உசாத்துணைகள்
- Lerner, K. Lee; Lerner, Brenda Wilmoth, eds. (2003). "Supercontinents". Gale Cengage/eNotes.com.
{{cite web}}: Invalid|ref=harv(help) - Zubritsky, Elizabeth (1997). "In the beginning, there was Ur". Endeavors.
{{cite web}}: Invalid|ref=harv(help)
வெளி இணைப்புகள்
- Zimmer, Carl (1997). "In Times of Ur". Discover Magazine.
{{cite web}}: Invalid|ref=harv(help); Unknown parameter|month=ignored (|date=suggested) (help)