கபஸ் ஹேரா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கபஸ் ஹேரா

கபசேரா

கபஸ் ஹேரா is located in டெல்லி
கபஸ் ஹேரா
கபஸ் ஹேரா
ஆள்கூறுகள்: 28°31′34″N 77°04′48″E / 28.5261°N 77.0800°E / 28.5261; 77.0800
நாடுஇந்தியா
மாவட்டம்தென்மேற்கு தில்லி மாவட்டம்
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்5,00,000+
மொழிகள்
 • அலுவல் மொழிகள்இந்தி மொழி & ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுDL9C
இணையதளம்https://dmsouthwest.delhi.gov.in/

கபஸ் ஹேரா (Kapas Hera), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் உள்ள தென்மேற்கு தில்லி மாவட்டம் மற்றும் கபாஸ்சேரா வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது புது தில்லிக்கு தென்மேற்கே 19 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,370 குடியிருப்புகள் கொண்ட கபஸ் ஹேரா நகரத்தின் மக்கள் தொகை 74,073 ஆகும். அதில் 50,123 ஆண்கள் மற்றும் 23,950 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்1 3.02 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 478 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.49 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 8.78 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 81.42%, இசுலாமியர் 17.76%, கிறித்தவர்கள் 0.55%, சீக்கியர்கள் 0.14% மற்றும் பிற சமயத்தினர் 0.14% வீதம் உள்ளனர்.[1]

போக்குவரத்து

சாலைகள்

தேசிய நெடுஞ்சாலை 48 கபஸ் ஹேரா வழியாகச் செல்கிறது. மற்றும் தேசிய நெடுஞ்சாலை 79 இந்நகர்புறத்திற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் செல்கிறது.

மெட்ரோ

துவாரகா மெட்ரோ நிலையம் இதற்கு 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

வானூர்தி நிலையம்

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் கபஸ் ஹேராவிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

தொடருந்து நிலையம்

விஜாசன் தொடருந்து நிலையம் கபஸ் ஹோராவிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

பேருந்துகள்

மாநகர தில்லி போக்குவரத்து கழகத்தின் கீழ்கண்ட எண்கள் கொண்ட பேருந்துகள் கபஸ் ஹேரா வழியாகச் செல்கிறது. அவைகள் பின்வருமாறு:. 543, 539, 578, 543A, 718, 712, 804A, 729.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கபஸ்_ஹேரா&oldid=314320" இலிருந்து மீள்விக்கப்பட்டது