ஆள்கூறுகள்: 19°36′N 81°40′E / 19.6°N 81.67°E / 19.6; 81.67

கொண்டகவான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
கொண்டகவான்

படிமம்:Image of kondagaon city in December 2019.jpg
2019ல் கொண்டகவான் நகரம்
அடைபெயர்(கள்): கைவினைஞர்கள் நகரம் (2)Kondanar
கொண்டகவான் is located in சத்தீசுகர்
கொண்டகவான்
கொண்டகவான்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் கொண்டகவான் நகரத்தின் அமைவிடம்
கொண்டகவான் is located in இந்தியா
கொண்டகவான்
கொண்டகவான்
கொண்டகவான் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°36′N 81°40′E / 19.6°N 81.67°E / 19.6; 81.67
நாடுஇந்தியா
மாநிலம்சத்தீஸ்கர்
மாவட்டம்கொண்டகவான்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்கொண்டகவான் நகராட்சி
 • பரப்பளவு தரவரிசைபஸ்தர் கோட்டத்தில் 3வது நகரம்
ஏற்றம்
593 m (1,946 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்30,921
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
494226 (Kondagaon)[1]
வாகனப் பதிவுCG-27
இணையதளம்https://kondagaon.gov.in/en/

கொண்டகவான் (Kondagaon), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் கொண்டகவான் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான ராய்ப்பூருக்கு தெற்கே 230 கிலோ மிட்டர் தொலைவிலும், ஜெகதல்பூருக்கு வடமேற்கே 75 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகர மக்கள் ஹல்பி மொழியைப் பேசுகின்றனர். இந்நகரம் சிவப்பு தாழ்வாரம் பகுதியில் உள்ளது. இந்நகரம் கோயில் மணிகள்[2] உற்பத்தி செய்யும் உலோகக் கைவினைஞர்கள் அதிகம் கொண்டதால், இந்நகரத்தை கைவினைஞர்கள் நகரம் என்றும் அழைப்பர்.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 வார்டுகளும், 7,014 குடியிருப்புகளும் கொண்ட கொண்டகவான் நகரத்தின் மக்கள் தொகை 30,921 ஆகும். அதில் 15,346 ஆண்கள் மற்றும் 15,575 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1015 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 79.39 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 27.31 % மற்றும் 10.40 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 90.21%, இசுலாமியர் 3.87%, சமணர்கள் 2.03%, பௌத்தர்கள் 0.70%, கிறித்தவர்கள் 1.97%, சீக்கியர்கள் 1.04% மற்றும் பிற சமயத்தினர் 0.19% வீதம் உள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=கொண்டகவான்&oldid=341754" இலிருந்து மீள்விக்கப்பட்டது