கோடலா
கோடலா Kodala | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 19°38′N 84°57′E / 19.63°N 84.95°E | |
| நாடு | |
| மாநிலம் | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஒடிசா |
| மாவட்டம் | கஞ்சாம் |
| ஏற்றம் | 16 m (52 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 13,965[1] |
| மொழிகள் | |
| • அலுவல் | ஒரியா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 761032 |
| Telephone code | 06810 |
| வாகனப் பதிவு |
|
| இணையதளம் | odisha |
கோடலா (Kodala) என்பது இந்திய மாநிலமான ஒடிசாவின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் அறிவிக்கப்பட்ட பகுதி கவுன்சில் ஆகும்.
புவியியல்
19.63°வடக்கு, 84.95°கிழக்கு[2] என்ற அடையாள ஆள்கூறுகளில் கோடலா கிராம அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 16 மீட்டர் (52அடி) உயரத்தில் இக்கிராமம் உள்ளது.
மக்கள் தொகை
2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[4] கோடலா கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 12,341 ஆகும். இம்மக்கள் தொகையில் ஆண்கள் 50% ஆகவும் பெண்கள் 50% ஆகவும் இருந்தனர். கோடலாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 54% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% என்பதை விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 66% ஆகவும் பெண் கல்வியறிவு 42% ஆகவும் இருந்தது. கோடலாவின் மக்கள் தொகையில் 15% பேர் 6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர்.
அரசியல்
கொடாலா அசுகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தொகுதியாகும்.[5] கொடாலா சட்டமன்றத்தில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விவரம் வருமாறு:
- 2004- நிரஞ்சன் பிரதான், பாரதிய சனதா கட்சி
- 2000- இராம கிருட்டிண பட்நாயக்கு , பாரதிய சனதா கட்சி
- 1995- இராம கிருட்டிண பட்நாயக்கு, சனதா தளம்
- 1990- இராம கிருட்டிண பட்நாயக்கு, சனதா தளம்
- 1985- இராம கிருட்டிண பட்நாயக்கு, சனதா தளம்
- 1980- கானு சரண் நாயக்கு, இந்திய தேசிய காங்கிரசு
- 1977- இராம கிருட்டிண பட்நாயக்கு, சனதா தளம்
- 1974- கானு சரண் நாயக்கு, இந்திய தேசிய காங்கிரசு
- 1971- இராம கிருட்டிண பட்நாயக்கு
காலநிலை
கோடையில் அதிகபட்ச வெப்பநிலை 37°செல்சியசு; குறைந்தபட்ச குளிர்கால வெப்பநிலை 17°செல்சியசு சராசரி தினசரி வெப்பநிலை 33°செல்சியசு முதல் 38°C வரை மாறுபடும். மே மாதம் வெப்பமான மாதமாகவும் டிசம்பர் மாதம் மிகவும் குளிரான மாதமாகவும் இருக்கும். கொடாலாவில் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 1250 மிமீ ஆகும். மேலும் சூலை முதல் அக்டோபர் வரை இப்பகுதியில் பருவமழை மற்றும் அடைமழை பெய்யும்.
| தட்பவெப்ப நிலைத் தகவல், Kodala, Odisha | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 27 (81) |
30 (86) |
34 (93) |
36 (97) |
37 (99) |
34 (93) |
32 (90) |
31 (88) |
32 (90) |
32 (90) |
30 (86) |
28 (82) |
31.9 (89.5) |
| தாழ் சராசரி °C (°F) | 16 (61) |
19 (66) |
23 (73) |
27 (81) |
29 (84) |
28 (82) |
27 (81) |
27 (81) |
26 (79) |
23 (73) |
20 (68) |
16 (61) |
23.4 (74.2) |
| மழைப்பொழிவுmm (inches) | 12.40 (0.4882) |
17.40 (0.685) |
18.60 (0.7323) |
15.00 (0.5906) |
40.30 (1.5866) |
150.00 (5.9055) |
282.10 (11.1063) |
272.80 (10.7402) |
180.00 (7.0866) |
93.00 (3.6614) |
33.00 (1.2992) |
18.60 (0.7323) |
1,133.2 (44.6142) |
| ஆதாரம்: MSM Weather | |||||||||||||
மேற்கோள்கள்
- ↑ "Urban Agglomerations/Cities having Census 2011-2020 in Orissa". தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Retrieved 10 October 2014.
- ↑ Falling Rain Genomics, Inc - Kodala
- ↑ "Urban Agglomerations/Cities having Census 2011-2020 in Orissa". Registrar General and Census Commissioner of India. Retrieved 10 October 2014.
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Odisha" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. Retrieved 2008-09-13.