கௌரிகார்
கௌரிகார் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 25°16′N 80°11′E / 25.26°N 80.19°E | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | சத்தர்பூர் |
| வாகனப் பதிவு | மபி-16 |
கௌரிகார் (Gourihar) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள சத்தர்பூர் மாவட்டத்தின் ஒரு நகரம் மற்றும் ஒரு தாலுகா ஆகும்.[1] இது மத்தியப் பிரதேசத்தின் புண்டேல்கண்ட் என்ற பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூர் உத்தரப் பிரதேச மாநிலத்தின் அருகில் அமைந்தள்ளது.[2]
வரலாறு
இந்தக் கௌரிகார் குடும்பம் அசாய்கர் மகாராஜாக்களின் மூதாதையரான குமன் சிங் என்பவரின் ஆட்சியில், ஒரு கோட்டையின் ஆளுநராக இருந்து வந்த ராஜா ராம் திவாரியின் என்பவரின் வழித்தோன்றல்கள் ஆவார்கள். இந்தக் காலத்தில் அராஜகத்தின் போது, ராஜா ராம் கிளர்ச்சி செய்து சிறிது காலம் கோட்டையை வெற்றிகரமாக கைப்பற்றி வைத்திருந்தார். கௌரிகார் சுசவ்தியா என்ற பிரிவின் கன்ய்குப்ச் பிராமணரான திவாரி ஆட்சி செய்தார். [3]கௌரிகார் மாநிலம் 1807 ஆம் ஆண்டில் அசாய்கர் மாநிலத்திலிருந்து பிரிந்த பிறகு நிறுவப்பட்டது. பிரதாப் சிங் சூதேவ் என்பவர் 1950 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அன்று இந்தியாவுடன் இணைவதற்கு கையெழுத்திட்டார். மகாராஜா பிரதாப் சிங் சூதேவ் கௌரிகார் மாநிலத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார்.[4]
புவியியல்
கௌரிகார் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 508 மீட்டர் (1669 அடி) உயரத்தில் உள்ளது. இது சத்தர்பூரிலிருந்து 90 கி.மீ தொலைவில் உள்ளது.[5]
மக்கள்தொகை
இந்திய மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி கௌரிகார் நகரத்தின் மக்கள் தொகை 5,128 ஆகும். இதில் 2,623 ஆண்கள் மற்றும் 2,505 பெண்கள் இருந்ஹனர். இந்த நகரத்தில் மொத்தம் 1,094 குடும்பங்கள் வசித்து வந்தனர். கௌரிகார் கிராமத்தின் சராசரி பாலின விகிதம் 955. கௌரிகாரில் ஆண் கல்வியறிவு 84.87% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 66.74% ஆகவும் இருந்தது.[6]
மேற்கோள்கள்
- ↑ "Chhatarpur Tehsil Map, Chhatarpur Tehsil List". MapsofIndia.com. Retrieved 13 October 2013.
- ↑ "Tehsil". [Chhatarpur district]. Retrieved 3 December 2024.
- ↑ The Chiefs of Central India
- ↑ Princely States of India A-J
- ↑ "Maps, Weather, and Airports for Gaurihar, India". fallingrain.com. Retrieved 3 December 2024.
- ↑ "Gaurihar Village Population". www.census2011.co.in. Retrieved 3 December 2024.
[[பகுப்பு:புந்தேல்கண்ட்]] [[பகுப்பு:சத்தர்பூர்]] [[பகுப்பு:சத்தர்பூர் மாவட்டம்]]