சிரியா சர்மா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சிரியா சர்மா
பிறப்புசிரியா சர்மா
1997 (அகவை 28–29)
பாலம்பூர், இமாச்சலப் பிரதேசம் இந்தியா
பணிநடிகை
மாதிரிவுரு
வழக்கறிஞர்
செயற்பாட்டுக்
காலம்
2001–2016, 2024
விருதுகள்சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய திரைப்பட விருது

சிரியா சர்மா (Shriya Sharma) (பிறப்பு 1997) ஒரு இந்திய நடிகை, மாதிரியுரு மற்றும் வழக்கறிஞர் ஆவார், இவர் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவர் கசவுதி ஜிந்தகி கே என்ற தொலைக்காட்சித் தொடரில் சினேகா பாசுவின் இளைய தோற்றத்தில் நடித்ததற்காக அறியப்படுகிறார், இது அவருக்கு ஸ்டார் பரிவார் மற்றும் சிறந்த குழந்தை கலைஞருக்கான இந்தியன் தொலைக்காட்சி விருதுகளை வென்றது. சில்லர் பார்ட்டி (2011) என்ற திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.

தனிப்பட்ட வாழ்க்கை

சிரேயா சர்மா 1997 ஆம் ஆண்டில், இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பாலம்பூர் நகரில் பிறந்தார். அவரது தந்தை ஒரு பொறியாளர் மற்றும் அவரது தாயார் ஒரு உணவியல் நிபுணர் மற்றும் உணவொழுக்க ஆலோசக மருத்துவாராவார். சிரியா சட்டம் பயின்றவர், தற்போது வழக்கறிஞராகப் பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு ஒரு இளைய சகோதரன் இருக்கிறார்.

மேற்கோள்கள்

  1. "BioGraphy". Archived from the original on 5 August 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=சிரியா_சர்மா&oldid=360190" இலிருந்து மீள்விக்கப்பட்டது