சீரியனைட்டு-(Ce)
| சீரியனைட்டு-(Ce) Cerianite-(Ce) | |
|---|---|
சீரியனைட்டு-(Ce) மஞ்சள் தூள்-பிரேசில் நாட்டில் கிடைத்தது. | |
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு |
| வேதி வாய்பாடு | (Ce,Th)O 2 |
| இனங்காணல் | |
| நிறம் | அடர் பச்சை நிறம், மஞ்சள் |
| படிக இயல்பு | எண்முகி; மண் போன்றது, மிகப்பெரியது |
| படிக அமைப்பு | கனசதுரம் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் அல்லது ஒளிபுகும் |
| அடர்த்தி | 7.20 (செயற்கை பொருள், கணக்கிடப்பட்டது.; தோராயமானது.) |
| பிற சிறப்பியல்புகள் | |
| மேற்கோள்கள் | [1][2][3] |
சீரியனைட்டு-(Ce) (Cerianite-(Ce)) என்பது (Ce,Th)O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[3][4] ஓர் அரிய ஆக்சைடு கனிமமான இது யுரேனைட்டு வகை கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய நான்கிணைய சீரியத்தைக் கொண்ட தற்போது அறியப்பட்ட சில கனிமங்களில் ஒன்றாகும். மற்ற எடுத்துக்காட்டுகள் சுடெடிண்டைட்டு மற்றும் டைர்னைசைட்டு-(La) ஆகியவை பிற எடுத்துக்காட்டுகளாகும்.[5][6]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சீரியனைட்டு கனிமத்தை Cei-Ce[7] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
தோற்றம்
சீரியனைட்டு-(Ce) காரப் பாறைகளுடன் பெரும்பாலும் நெஃபலின் சினைட்டுகளுடன் தொடர்பு கொண்டு காணப்படுகிறது.[2] கார்பனேட்டைட்டுகளிலும் சீரியனைட்டு-(Ce) காணப்படலாம். அபடைட்டு, பாசுட்டனசைட்டு குழு கனிமங்கள், கால்சைட்டு, பெல்ட்சுபார், புளோவோசெரைட்டு, ஐதரோமைக்கா, இல்மெனைட்டு, நெஃபெலின், மேக்னடைட்டு, தோர்ன்பொகிமைட்டு, திரெமோலைட்டு ஆகிய கனிமங்களுடன் சேர்ந்து சீரியனைட்டு கனிமம் காணப்படுகிறது.[2] மிகவும் எளிய சீரியக் கனிமமாகவும் இது அறியப்படுகிறது.[3]
வேதிப் பண்புகள்
தோரியத்தை தவிர சீரியனைட்டு-(Ce) கனிமமும் சுவடு அளவில் நையோபியம் , இட்ரியம், இலந்தனம், இட்டெர்பியம், சிர்க்கோனியம் மற்றும் தாண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.[2]
படிகக் கட்டமைப்பு
படிக கட்டமைப்பு பற்றிய விவரங்களுக்கு சீரியம்(IV) ஆக்சைடைப் பார்க்கவும். சீரியா மற்றும் தோரியா இரண்டும் புளோரைட்டு கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
மேற்கோள்கள்
- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Cerianite-(Ce) - Handbook of Mineralogy" (PDF). Handbookofmineralogy.org. Retrieved 2016-03-04.
- ↑ 3.0 3.1 3.2 "Cerianite-(Ce): Cerianite-(Ce) mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ Graham, A.R., 1955. Cerianite CeO2: a new rare-earth oxide mineral. American Mineralogist 40, 560-564
- ↑ "Stetindite: Stetindite mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ "Dyrnaesite-(La): Dyrnaesite-(La) mineral information and data". Mindat.org. Retrieved 2016-03-04.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.