சூரப்பட்டு
Jump to navigation
Jump to search
சூரப்பட்டு சூரப்பேடு | |
|---|---|
புறநகர்ப் பகுதி | |
| சென்னை சென்னை | |
| ஆள்கூறுகள்: 13°08′36.4″N 80°11′28.2″E / 13.143444°N 80.191167°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சென்னை மாவட்டம் |
| மாநகராட்சி | சென்னை மாநகராட்சி |
| மண்டலம் | மாதவரம் மண்டலம், வட சென்னை |
| சென்னை மாநகராட்சி மண்டலம் | III |
| வார்டு எண் | 24 |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | சென்னை மாநகராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2.78 km2 (1.07 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 10,444 |
| • அடர்த்தி | 3,800/km2 (9,700/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 600066 |
| வாகனப் பதிவு | TN-05 , TN-18 |
| மக்கள்வைத் தொகுதி | வட சென்னை |
| சட்டமன்றத் தொகுதி | மாதவரம் |
| அருகமைந்த ஊர்கள் | அம்பத்தூர், புழல், கொளத்தூர், கொரட்டூர் |
| இணையதளம் | https://chennaicorporation.gov.in/gcc/ |
சூரப்பட்டு (Surapet) அல்லது சூரப்பேடு என்றும் அழைக்கப்படும் புறநகர்ப் பகுதியானது, தமிழ்நாடு மாநிலத்தின் அம்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், வட சென்னை, சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டலத்தின் 24-வது வார்டில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் புழல், கிழக்கில் கொளத்தூர், தெற்கில் புத்தகரம், மேற்கில் புழல் ஏரி ஆகியவை அமைந்துள்ளன. இது கிராண்ட் நேஷனல் டிரங்க் சாலை அருகே அமைந்துள்ளது.
அருகமைந்த பெரிய ஊர்கள்
இதனருகில் வில்லிவாக்கம், அம்பத்தூர், அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் பெரம்பூர் அமைந்துள்ளது.
- ரெட்டேரி தொடருந்து நிலையம் (2 கி.மீ.)
- கொரட்டூர் தொடருந்து நிலையம் - 5 கி.மீ.
- புழல் முகாம் (2 கி.மீ.)
- பாடி (4 கி.மீ.)
போக்குவரத்து
இது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
