சைத்துவல்
Jump to navigation
Jump to search
சைத்துவல் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 23°41′23″N 92°57′20″E / 23.689630°N 92.955670°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மிசோரம் |
| மாவட்டம் | சைத்துவல் மாவட்டம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 10,243 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | மிசோ மொழி & ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 796261 |
| வாகனப் பதிவு | MZ 10 |
| இணையதளம் | mizoram |
சைத்துவல் (Saitual), வடகிழக்கு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள சைத்துவல் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது மிசோரம் மாநிலத் தலைநகரான அய்சால் நகரத்திற்கு கிழக்கே 70.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. . இது கிழக்கு இமயமலைத் தொடரில் 1270 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2457 குடியிருப்புகள் கொண்ட சைத்துவல் நகரத்தின் மக்கள் தொகை 11619 ஆகும். அதில் 5727 ஆண்கள் மற்றும் 5892 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.22% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1029 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.51% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் மிசோ மக்கள் 98.18% வீதம் உள்ளனர்.[1]