தாகிரா காசி
| தாகிரா காசி Tahira Qazi | |
|---|---|
| படிமம்:Tahira Qazi (1951 - 2014).JPG | |
| தாய்மொழியில் பெயர் | طاھره قاضی |
| பிறப்பு | 1 சூலை 1951 மார்தான், பாக்கித்தான் |
| இறப்பு | 16 December 2014 (aged 63) பெசாவர் இராணுவப் பள்ளிக்கூடம், பாக்கித்தான் |
| இறப்பிற்கான காரணம் | தீயிட்டு கொல்லப்பட்டார் |
| கல்லறை | இலந்தி அர்பாபு 33° 58′ 46″ N, 71° 32′ 41″ E |
| கல்வி | பெசாவர் பல்கலைக்கழகம் |
| பணி | கல்வியாளர் |
| செயற்பாட்டுக் காலம் | 1994-2014 |
| வாழ்க்கைத் துணை | காசி சபாருல்லா |
| பிள்ளைகள் | 3 |
| விருதுகள் | சித்தாரா-இ-சுச்சாத்து விருது (2015) |
தாகிரா காசி (Tahira Qazi) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வியாளர் ஆவார். 1951 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியில் இவர் பிறந்தார். பெசாவர் இராணுவப் பொதுப் பள்ளியின் முதல்வராகவும் அறியப்படுகிறார். 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று பெசாவர் பள்ளி தாக்குதலில் கொல்லப்பட்டார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
தாகிரா காசி 1951 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் நாளன்று பாக்கித்தானின் மர்தான் நகரத்தில் காசி அயாத் உல்லா கானுக்கு மகளாகப் பிறந்தார். அங்கு இவர் ஆரம்ப பள்ளிப்படிப்பில் பயின்றார். பெசாவர் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, 1970 ஆம் ஆண்டுகளில் தனது கற்பித்தல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1980 ஆம் ஆண்டுகளில் பாக்கித்தான் இராணுவ கர்னலாக இருந்த (இப்போது ஓய்வு பெற்றவர்) காசி இயாப்ருல்லாவை மணந்தார். தாகிரா காசி 1995 ஆம் ஆண்டு பெசாவர் இராணுவ பொதுப் பள்ளியில் ஆங்கிலத் துறைத் தலைவராகச் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு அந்தப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 2006 முதல் பெசாவர் இராணுவப் பொதுப் பள்ளியின் முதல்வராக இருந்த இவர், 2015 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெறவிருந்தார். இவரது மாணவர்களின் கூற்றுப்படி, இவர் ஆங்கிலம் கற்பித்தார். [4][5]
மரணம்.
2014 டிசம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று தெக்ரிக்-இ-தலிபான் பாக்கித்தான் அமைப்புடன் இணைந்த பயங்கரவாதிகள் பெசாவர் இராணுவப் பொதுப் பள்ளியைத் தாக்கினர். ஆகத்து மாதத்தில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு ஆணையம், கைபர்-பக்துன்வாவின் அரசாங்கம், காவல்துறை மற்றும் எல்லைப் படையினருக்கு மாகாணத்தில் இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது வரவிருக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து முன்னறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தாக்குதலின்போது, தாகிரா காசி மாணவர்களைப் பாதுகாக்க முயன்றார். மேலும் தீவிரவாதிகளுக்கு முன்னால் குதித்து, "நான் அவர்களின் தாய், என்னுடன் பேசுங்கள்" என்று கூறினார். பின்னர், ஒரு மூத்த இராணுவ அதிகாரியின் மனைவி என்று கூறி, தனது மாணவர்களுக்கு முன்னால் தீ வைத்து கொளுத்தப்பட்டார்.[6] பள்ளியில் 148 பேர் - பெரும்பான்மையான குழந்தைகள் - படுகொலை செய்யப்பட்டனர்.
தாகிரா காசி லாண்டி அர்பாபில் அடக்கம் செய்யப்பட்டார். [7][8][9] இவருக்கு கணவர், ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர். .[6]
விருதுகளும் கௌரவங்களும்
தாகிரா காசி பாக்கித்தான் தினத்தன்று 2015 ஆம் ஆண்டில் சனாதிபதி மம்னூன் உசேன் அவர்களால் சிதாரா-இ-சுச்சாத்து விருது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.[10][11] கைபர் பக்துன்க்வா சட்டமன்றத்தின் ஒரு மாநாட்டு அறை அவரது நினைவாக "தாகிரா காசி மாநாட்டு அறை" என்று மறுபெயரிடப்பட்டது.[12]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "In praise of … Tahira Qazi | Hugh Muir | Comment is free". The Guardian. 2014-03-13. Retrieved 2015-05-13.
- ↑ "'I Shall Rise and Shine' ‹ Newsweek Pakistan". Newsweekpakistan.com. Retrieved 2015-05-13.
- ↑ Marszal, Andrew. "Inside the Pakistan school: harrowing images reveal full terror of Taliban attack". Telegraph. Retrieved 2015-05-13.
- ↑ Ahmed, Riaz (17 December 2014). "Tahira Qazi: Life lived on principles - The Express Tribune". Tribune.com.pk. Retrieved 2015-05-13.
- ↑ Mansoor, Halima (10 May 2015). "Tahira Qazi: To mother, with love - The Express Tribune". Tribune.com.pk. Retrieved 2015-05-13.
- ↑ 6.0 6.1 "Tahira Kazi: Peshawar school principal who was burnt alive by Taliban for marrying a Pak army officer : Neighbours, News - India Today". Indiatoday.intoday.in. 2014-12-17. Retrieved 2015-05-13."Tahira Kazi: Peshawar school principal who was burnt alive by Taliban for marrying a Pak army officer : Neighbours, News - India Today". Indiatoday.intoday.in. 17 December 2014. Retrieved 13 May 2015.
- ↑ Hughes, Chris (2014-12-17). "Pakistan school attack: Brave teacher torched by Taliban terrorists after over my dead body vow - Mirror Online". Mirror.co.uk. Retrieved 2015-05-13.
- ↑ "Taliban School Invasion: Principal burnt alive before pupils because she married a soldier" (in ஜெர்மன்). Pulse.ng. 17 December 2014. Retrieved 2015-05-13."Taliban School Invasion: Principal burnt alive before pupils because she married a soldier" (in German). Pulse.ng. 17 December 2014. Retrieved 13 May 2015.
- ↑ "Pakistan's valiant, unsung heroes | ARY NEWS". Arynews.tv. 2015-02-28. Retrieved 2015-05-13.
- ↑ "The complete list of recipients of awards on Pakistan Day - The Express Tribune". Tribune.com.pk. 2015-03-24. Retrieved 2015-05-13.
- ↑ "School carnage victims to get bravery award - Pakistan". Dawn.Com. 2015-03-06. Retrieved 2015-05-13.
- ↑ "Army Public School attack: Tahira Qazi (APS principal) — Age 64". DAWN.COM (in ஆங்கிலம்). 1 December 2015. Retrieved 2 June 2022.