தாவரவளம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஒரு தீவின், எளிமையான தாவரவளம் தெரிவிக்கும் வரைபடம்

தாவரவளம் (flora (பன்மை: floras அல்லது florae) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் அல்லது காலத்தில் இருக்கும், அனைத்து தாவரங்களையும் குறிப்பிடுகிறது. பெரும்பாலும், பொதுவாக இயற்கையாகக் காணப்படும் உள்ளிடச் சூழலியலில் வளரும் அகணியத் தாவரங்களைக் குறிக்கிறது. இச்சொல்லினைப் போலவே, விலங்குகளைக் குறிக்க, விலங்குவளம் (fauna) என்ற சொல் பயன்படுகிறது. பூஞ்சைகளைக் குறிக்க பூஞ்சைவளம் (funga) என்ற சொல்லும்[1] பயன்படுத்தப்படுகிறது.[2] சில நேரங்களில், பாக்டீரியாகள், பூஞ்சைகள் இரண்டும் தாவரவளம் (flora அல்லது gut flora அல்லது skin flora) என்றும் குறிக்கப்படுகிறது.[3][4][5]

சொற்பிறப்பியல்

சூலெசு தர்மண், இச்சொல்லை(flora) உருவாக்கியவர்

ரோமானிய புராணங்களில் தாவரங்கள், மலர்கள் ஆகியவற்றின் தெய்வமான ஃபுளோராவின் (Flora) இலத்தீன் பெயரிலிருந்து 'ஃபுளோரா'(flora) என்ற சொல் வருகிறது.[6][7] இந்தப் பெண் தெய்வத்தின் பெயரினைப் பயன்படுத்தி ஆகு பெயராக, பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில், 'ஃபுளோரா' என்ற இந்த துறைச்/கலைச் சொல் உருவானது[8]. ஒரு பகுதியின் இயற்கையான தாவரங்களைக் குறிக்க முதலில் கவிதைகளில் பயன்படுத்தப்பட்ட இது, விரைவில் அத்தகைய தாவரங்களை பட்டியலிடும் ஒரு படைப்பு என்ற பொருளைப் பெற்றது. மேலும், பதினேழாம் நூற்றாண்டில், செயற்கைத் தோட்டத்தின் மலர்களைக் குறிக்கவும், 'ஃபுளோரா' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது[9]

தாவரத்தொகுதி / தாவரக்குழு (vegetation = ஓர் குறிப்பிட்ட இடத்தின் பொதுவான தோற்றம்), தாவரவளம் (flora = ஓர் குறிப்பிட்ட இடத்தின் வகைப்பாட்டியல்) ஆகிய இரண்டுக்கும் இடையேயான வேறுபாட்டை, முதலில் பிரெஞ்சு அறிஞரான சூலெசு தர்மானால் (Jules Thurmann -1849) தெளிவு படுத்தினார். இவருக்கு முன்பு, இந்த இரண்டு சொற்களும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டன.[10][11]

வகைப்பாடுகள்

சைமன் பாலி, முதல் தாவர வளப்புத்தகப் பதிப்பாளர்

தாவரங்கள் மண்டல / ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதி என்பது, காலப்பகுதி, சிறப்புச் சூழல் அல்லது காலநிலை ஆகியவற்றின் அடிப்படையில், தாவரக் குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன. மலை, சமவெளி போன்ற தனித்துவமான வாழ்விடங்களாகப் பகுதிகளைக் குறிப்பிடலாம். புதைபடிவத் தாவரங்கள் என்பதில் பழங்காலத் தாவர வாழ்க்கை எனப் பொருள்படும். இறுதியாக, சிறப்புச் சூழல்களின் அடிப்படையில், தாவரக் குழுக்கள் மேலும் பிரிக்கப்படலாம்:

  • உள்ளூர்த் தாவரவளங்கள் (Native flora[12]) - ஒரு பகுதியின் பூர்வீக, உள்நாட்டுத் தாவரங்கள்.
  • வேளாண், தோட்டக்கலைத் தாவரவளங்கள் (Garden flora[13]). மனிதர்களால் வேண்டுமென்றே வளர்க்கப்படும் தாவரங்கள்.
  • களைத் தாவரங்கள் (Weed flora[14]) - பாரம்பரியமாக, இந்த வகைப்பாடு விரும்பத்தகாததாகக் கருதப்படும் தாவரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. அவற்றைக் கட்டுப்படுத்த, ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இவை கவனம் பெற்றன.
    • களைச் செடிகள், ஆக்கிரமிப்புச் செடிகள் (களைச் செடிகளாக இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்), மற்றும் வேளாண்மைக்கு விரும்பத்தகாத உள்நாட்டு மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட களை அல்லாத செடிகள். முன்னர் களைகளாகக் கருதப்பட்ட பல உள்நாட்டுத் தாவரங்கள் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்மை பயக்கும் அல்லது அவசியமானவை என்று காட்டப்பட்டுள்ளன.

இன்று, இந்த வரையறை தாவர வாழ்க்கையின் வகைப்பாடாகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது மூன்று வெவ்வேறு வகையான தாவர வளங்களை உள்ளடக்கி உள்ளது.

ஆவணமாக்கல்

தாவரப்பரவலைப் பதிவு செய்வதற்கான உலக புவியியல் திட்டம்(WGSRPD)
ஐரோப்பிய தாவர வளங்கள் (by Wolfgang Frey and Rainer Lösch)

ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது காலத்தின் தாவரங்கள், "ஃப்ளோரா" (Flora) என்று அழைக்கப்படும் ஒரு பதிப்பக வெளியீட்டில் ஆவணப்படுத்தப்படலாம் (ஆங்கிலத்தில் இரண்டு அர்த்தங்களும் குழப்பமடையக்கூடும் போது, வேறுபடுத்துவதற்காக "ஃப்ளோரா"(Flora) என பெரிய எழுத்தில் எழுதப்படலாம்). இத்தகைய ஃப்ளோராக்களை திறம்பட உருவாக்க அல்லது பயன்படுத்த, சிறப்பு தாவர அறிவு தேவைப்படலாம். பாரம்பரியமாக இவை புத்தகங்களாக இருக்கின்றன, ஆனால், சில இப்போது சிடி-ரோம் அல்லது இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.

1648 ஆம் ஆண்டில் சைமன் பாலி எழுதிய ஃபிலோரா டானிகா (Flora Danica) என்ற புத்தகம், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் தாவர உலகத்தை "ஃபிலோரா" என்று தலைப்பிட்ட முதல் புத்தகம் ஆகும். இது முக்கியமாக டென்மார்க்கில் வளரும், மருத்துவ தாவரங்களைப் பற்றி விவரிக்கிறது. 1656 ஆம் ஆண்டில், போலந்து நாட்டு இயேசு சபைத் துறவியான மைக்கேல் பாய்ம் எழுதிய ஃபிலோரா சினென்சிஸ் (Flora Sinensis), "ஃபிலோரா" என்று தலைப்பிடப்பட்ட மற்றொரு புத்தகம் ஆகும்.[15] இருப்பினும், அதன் தலைப்புக்கு மாறாக, இது அந்த மண்டலத்தின் தாவரங்களை மட்டுமல்லாமல், சீனா, இந்தியாவின் சில விலங்குகளையும் உள்ளடக்கியுள்ளது.[9]

பதிப்பிக்கப்பட்ட தாவரவியல் நூல்களில் பெரும்பாலும் கண்டறியும் திறவுகோல்கள் (diagnostic keys) அடங்கும். பெரும்பாலும் இவை இருநிலை திறவுகோல்கள் (dichotomous keys) ஆகும். இவை ஒரு பயனரை, ஒரு தாவரத்தை மீண்டும் மீண்டும் பரிசோதித்து, கொடுக்கப்பட்டுள்ள இரண்டு மாற்று வழிகளில், எது அந்தத் தாவரத்திற்குச் சிறப்பாகப் பொருந்தும் என்பதைத் தீர்மானிக்க உதவும்.

இவற்றையும் காணவும்

மேற்கோள்கள்

  1. Kuhar, Francisco; Furci, Giuliana; Drechsler-Santos, Elisandro Ricardo; Pfister, Donald H. (December 2018). "Delimitation of Funga as a valid term for the diversity of fungal communities: the Fauna, Flora & Funga proposal (FF&F)" (in en). IMA Fungus 9 (2): A71–A74. doi:10.1007/BF03449441. பன்னாட்டுத் தர தொடர் எண்:2210-6359. https://imafungus.biomedcentral.com/articles/10.1007/BF03449441. 
  2. Kuhar, Francisco; Furci, Giuliana; Drechsler-Santos, Elisandro Ricardo; Pfister, Donald H. (December 2018). "Delimitation of Funga as a valid term for the diversity of fungal communities: the Fauna, Flora & Funga proposal (FF&F)" (in en). IMA Fungus 9 (2): A71–A74. doi:10.1007/BF03449441. பன்னாட்டுத் தர தொடர் எண்:2210-6359. https://imafungus.biomedcentral.com/articles/10.1007/BF03449441. 
  3. "flora". Merriam-webster online dictionary. Retrieved 23 நவம்பர் 2025.
  4. USGS-Biological Information & Teclnl0logy Notes."Sampling the bacterial flora of freshwater mussels" பரணிடப்பட்டது 2016-02-01 at the வந்தவழி இயந்திரம்.
  5. John, D.M.; Whitton, B.A.; Brook, A.J. (2002). The Freshwater Algal Flora of the British Isles: An Identification Guide to Freshwater and Terrestrial Algae. Cambridge University Press. ISBN 9780521770514.
  6. Daly, Kathleen N. (2009). Greek and Roman mythology, A to Z. Revised by Marian Rengel (3rd ed.). New York: Chelsea House Publishers. ISBN 978-1604134124.
  7. Flora - inside the secret world of plants. Great Britain: Penguin Random House. October 2018. ISBN 9780241254806.
  8. "flora". etymonline. Retrieved 23 நவம்பர் 2025.
  9. 9.0 9.1 Berrens, Dominik (2019-03-21). "The Meaning of Flora" (in en). Humanistica Lovaniensia. Journal of Neo-Latin Studies 68 (1): 237–249. doi:10.30986/2019.237. பன்னாட்டுத் தர தொடர் எண்:2593-3019. 
  10. Thurmann, J. (1849). Essai de Phytostatique appliqué à la chaîne du Jura et aux contrées voisines. Berne: Jent et Gassmann, [1] பரணிடப்பட்டது 2017-10-02 at the வந்தவழி இயந்திரம்.
  11. Martins, F. R. & Batalha, M. A. (2011). Formas de vida, espectro biológico de Raunkiaer e fisionomia da vegetação. In: Felfili, J. M., Eisenlohr, P. V.; Fiuza de Melo, M. M. R.; Andrade, L. A.; Meira Neto, J. A. A. (Org.). Fitossociologia no Brasil: métodos e estudos de caso. Vol. 1. Viçosa: Editora UFV. p. 44–85. [2] பரணிடப்பட்டது 2016-09-24 at the வந்தவழி இயந்திரம். Earlier version, 2003, [3] பரணிடப்பட்டது 2016-08-27 at the வந்தவழி இயந்திரம்.
  12. "Why Native". National Wildlife Federation. Retrieved 22 நவம்பர் 2025.
  13. "About us". gardenfloraonline. Retrieved 22 நவம்பர் 2025.
  14. "An Ecological Understanding of Weeds". e organic. Retrieved 22 நவம்பர் 2025.
  15. Flora Sinensis பரணிடப்பட்டது 2010-02-06 at the வந்தவழி இயந்திரம் (access to the facsimile of the book, its French translation, and an article about it)

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தாவரவளம்&oldid=394290" இலிருந்து மீள்விக்கப்பட்டது