ஆள்கூறுகள்: 31°07′N 77°21′E / 31.12°N 77.35°E / 31.12; 77.35

தியோக்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தியோக்

நகரம்
தியோக் is located in இமாச்சலப் பிரதேசம்
தியோக்
தியோக்
Location in Himachal Pradesh, India
தியோக் is located in இந்தியா
தியோக்
தியோக்
தியோக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 31°07′N 77°21′E / 31.12°N 77.35°E / 31.12; 77.35
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம்சிம்லா
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்இராகேஷ் சின்கா
ஏற்றம்
2,310 m (7,580 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,353
Languages
 • Officialஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
171201
தொலைபேசி இணைப்பு91 1783 xxxxxx
வாகனப் பதிவுHP-09
குளிர்காலத்தில் தியோக்
தியோக் நகரம்

தியோக் ( Theog ) என்பது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் சிம்லா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி குழுவாகும். இதன் முதல் குடியேற்றங்கள் 1902 இல் இருந்தன.[1]

மக்கள்தொகை

2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ,[2] தியோக்கின் மக்கள் தொகை 3,754 பேர் என்ற அள்வில் இருந்தது. ஆண்களில் 57 சதவீத மக்களும், பெண்களில் 43 சதவீத பேரும் உள்ளனர். தியோக்கின் சராசரி கல்வியறிவு விகிதம் 64 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும்: ஆண்கள் கல்வியறிவு 73 சதவீதமும், மற்றும் பெண்கள் கல்வியறிவு 56 சதவீதமும் ஆகும். தியோக்கில், 12 சதவீத மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். 1931ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தியோக்க்கின் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 6912 ஆக இருந்தது. 1931இல் தியோக் மாநிலத்தில் 6800 இந்துக்கள், 91 முஸ்லீம்கள் மற்றும் 21 சீக்கியர்கள் இருந்தனர்.

நிலவியல்

தியோக் 31.12 ° வடகிலும் 77.35 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[3] இதன் சராசரி உயரம் 1965 மீட்டர் (6446 அடி) ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 22 இல் ( இந்தியா-திபெத் சாலை ) அமைந்துள்ளது. இது சிம்லாவிலிருந்து 32 கி.மீ தூரத்தில் உள்ளது.

குளிர்காலத்தில் தியோக்

தியோக் அதிகாரத்தின் கீழ் வரும் ஏராளமான கிராமங்கள் உள்ளன.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை 5 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 705 வழியாக தியோக் இமாச்சலத்துடனும் இந்தியாவின் பிற பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.[4] தியோக் சிம்லா விமான நிலையத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும், சிம்லா ரயில் நிலையத்திலிருந்து 32 கி.மீ தொலைவிலும் உள்ளது

குறிப்புகள்

  1. Punjab State Gazetteers: pt. A. Simla Hill States. Punjab: Superintendent, Government Printing, 1935. 1935. p. 27.
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
  3. Falling Rain Genomics, Inc - Theog
  4. "National Highways in Himachal Pradesh" (PDF). Himachal Pradesh Public Works Department. Archived from the original (PDF) on 17 ஏப்ரல் 2018. Retrieved 23 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தியோக்&oldid=396405" இலிருந்து மீள்விக்கப்பட்டது