ஆள்கூறுகள்: 2°58′36.4″N 101°46′17.3″E / 2.976778°N 101.771472°E / 2.976778; 101.771472

தெலுக் பூலாய்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தெலுக் பூலாய்

Teluk Pulai
தெலுக் பூலாய் புறநகரம்
தெலுக் பூலாய் புறநகரம்
தெலுக் பூலாய் is located in மலேசியா
தெலுக் பூலாய்
      தெலுக் பூலாய்
ஆள்கூறுகள்: 2°58′36.4″N 101°46′17.3″E / 2.976778°N 101.771472°E / 2.976778; 101.771472
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்கிள்ளான் மாவட்டம்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
41100
தொலைபேசி எண்+60 33
போக்குவரத்துப் பதிவெண்கள்B

தெலுக் பூலாய் (ஆங்கிலம்: Teluk Pulai; மலாய்: Teluk Pulai) (TTP) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் மாவட்டம் (Klang District) கிள்ளான் மாநகரில் உள்ள புற நகரப்பகுதி ஆகும்.

தெலுக் பூலாய் புற நகரப்பகுதி கிள்ளான் நகராட்சியின் (Klang Municipal Council) அதிகார வரம்பிற்கு உட்பட்டது; மற்றும் கிள்ளான் புது நகரம் (Bandar Baru Klang); தெற்கு கிள்ளான் (Selat Klang) என இரண்டு சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற அதிகார வரம்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

பொது

தெலுக் பூலாய் புற நகரப்பகுதி, ஜாலான் ராயா பாராட் சாலை (Jalan Raya Barat); வடக்கு கிள்ளான் நீரிணை மாற்றுவழிச்சாலை (North Klang Straits Bypass); மற்றும் வடக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை (North Klang Valley Expressway); ஆகிய சாலைகளுடன் கிள்ளான் மூன்றாவது பாலம் (Klang Third Bridge) வழியாக கூட்டாட்சி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

இங்கு அமைந்துள்ள  KD15  தெலுக் பூலாய் கொமுட்டர் நிலையம் மற்ற தொடருந்து நிலையங்களுக்கும் சேவை வழங்குகிறது. கோலாலம்பூர் சென்ட்ரல்; தஞ்சோங் மாலிம் தொடருந்து நிலையம்; கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்களுக்குத் தொடருந்து போக்குவரத்துச் சேவையை வழங்குகிறது.[2]

குடியிருப்புகள்

  • தாமான் மெலாவிஸ்
  • தாமான் தெலுக் பூலாய் இண்டா
  • தாமான் தெலுக் பூலாய்
  • தாமான் கோத்தா ஜெயா
  • தாமான் வாங்கி
  • தாமான் அனேகா
  • கம்போங் சுங்கை ஊடாங்
  • அமேசிங் அயிட்ஸ்
  • பங்சாபுரி அங்கெரிக்
  • பங்சாபுரி சவுஜானா டாமாய்

மேற்கோள்கள்

  1. "Jambatan ketiga Klang dinamakan jambatan Raja Muda Nala Astro Awani".
  2. "The Teluk Pulai KTM station is a commuter train station operated by KTM Komuter and served by the Port Klang Route". klia2.info. Retrieved 20 August 2023.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தெலுக்_பூலாய்&oldid=403694" இலிருந்து மீள்விக்கப்பட்டது