ஆள்கூறுகள்: 18°43′N 73°46′E / 18.72°N 73.77°E / 18.72; 73.77

தேகு, புனே

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தேகு

சிற்றூர்
கிருஷ்ணர் கோயில்
கிருஷ்ணர் கோயில்
தேகு is located in மகாராட்டிரம்
தேகு
தேகு
இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் தேகு நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°43′N 73°46′E / 18.72°N 73.77°E / 18.72; 73.77
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புனே மாவட்டம்
அரசு
 • வகைநகர்புறம்
 • நிர்வாகம்பேரூராட்சி
ஏற்றம்
594 m (1,949 ft)
மக்கள்தொகை
 (2015)
 • மொத்தம்50,308
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
412109
வாகனப் பதிவுMH 12, MH 14

தேகு (Dehu), இந்தியாவின் மகராட்டிரம் மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், ஹவேலி தாலுகாவில் அமைந்த ஒரு பேரூராட்சி ஆகும். இது புனே நகரத்திற்கு வடக்கே 29.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பாண்டுரங்க விட்டலரின் பக்தரான துக்காராம் பிறந்த ஊராகும். தேகு நகரத்தில் கிருஷ்ணர் கோயிலும், துக்காராமின் சமாதி மற்றும் சன்னதியும் உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் துக்காரமின் பல்லக்கு, தேகுவிலிருந்து பண்டரிபுரம் விட்டலர் கோயில் வரை ஊர்வலமாகச் செல்லும். இது இந்திராணி ஆற்றின் கரையில் உள்ளது. இதனருகில் தேகு ரோடு கண்டோன்மென்ட் அமைந்துள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 1,381 வீடுகள் கொண்ட தேகு பேரூராட்சியின் மக்கள் தொகை 6,133 ஆகும். அதில் 3,178 ஆண்கள், 2,955 பெண்கள் உள்ளனர்.பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு 930 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.64 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 26.22%, 0.93% ஆக உள்ளனர். இந்நகர மக்களில் இந்து சமயத்தினர் 80.06%, இசுலாமியர் 8.09%, சமணர்கள் 0.46%, கிறித்தவர்கள் 1.03%, சீக்கியர்கள் 0.46%, பிறர் 0.12% ஆக உள்ளனர்[1]

மேற்கோள்கள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=தேகு,_புனே&oldid=403911" இலிருந்து மீள்விக்கப்பட்டது