ஆள்கூறுகள்: 24°29′N 86°42′E / 24.48°N 86.7°E / 24.48; 86.7

தேவ்கர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
தேவ்கர்

நகரம்
அடைபெயர்(கள்): பாபா நகர்
தேவ்கர் is located in சார்க்கண்டு
தேவ்கர்
தேவ்கர்
தேவ்கர் is located in இந்தியா
தேவ்கர்
தேவ்கர்
ஆள்கூறுகள்: 24°29′N 86°42′E / 24.48°N 86.7°E / 24.48; 86.7
நாடுஇந்தியா
மாநிலம்ஜார்கண்ட்
மாவட்டம்தேவ்கர்
அரசு
 • நிர்வாகம்தேவ்கர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்337 km2 (130 sq mi)
ஏற்றம்
254 m (833 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,03,116
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
814112
தொலைபேசி குறியீடு06432
வாகனப் பதிவுJH-15
பாலின விகிதம்921 /
மக்களவைத் தொகுதிகோடா
சட்டமன்றத் தொகுதிதேவ்கர் சட்டமன்றத் தொகுதி
இணையதளம்https://deoghar.nic.in/

தேவ்கர் (Deoghar) இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் தேவ்கர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரமும், மாநகராட்சியும் ஆகும். இந்நகரத்தில் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான பைத்தியநாத் கோவில் உள்ளது.

தேவ்கர் கோயில், 1802

புவியியல்

இந்தியாவின் கோண்டுவானா பிரதேசத்தில் அமைந்த இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 255 மீட்டர் (833 அடி) உயரத்தில் உள்ள்து.[1] அஜய் ஆற்றின் கரையில் தேவ்கர் நகரம் உள்ளது. இந்நகரத்தைச் சுற்றி சிறு குன்றுகள் சூழ்ந்துள்ளது. [2][3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 35 வார்டுகளும், 36,768 வீடுகளும் கொண்ட தேவ்கர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 203,123 ஆகும். அதில் 107,997 ஆண்கள் மற்றும் பெண்கள் 95,126 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 26893 (13.24%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 881 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.68% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 94.30%, முஸ்லீம்கள் 4.96%, மற்றும் பிற சமயத்தவர்கள் 0.74% ஆகவுள்ளனர்.[4]

பண்பாடு

ஜார்கண்ட் மாநிலத்தின் பண்பாட்டு தலைநகரான தேவ்கர் நகரம் உள்ளது.[5]இந்நகரத்தில் இந்தி மொழி மற்றும் சந்தாளி மொழிகள் பேசப்படுகிறது.

கல்வி

  • அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், தேவ்கர்
  • தேவ்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • பிர்லா தொழில்நுட்ப நிறுவனம், தேவ்கர்
  • வைத்தியநாத் கமல் குமாரி சமசுகிருத கல்லூரி
  • தேவ் சங்கா தொழில் படிப்புகள் மற்றும் கல்வியியல் ஆய்வு நிறுவனம் (DIPSER)[6]

போக்குவரத்து

தொடருந்து நிலையம்

தேவ்கர் தொடருந்து சந்திப்பு நிலையம் மூன்று நடைமேடைகள் கொண்டது. தேவ்கரிலிருந்து ராஞ்சி, அகர்தலா நகரங்களுக்குச் செல்ல விரைவு வண்டிகள் உள்ளது.[7]

வானூர்தி நிலயம்

தேவ்கர் நகரத்தின் அடல் பிகார் வாஜ்பாயி பன்னாட்டு வானூர்தி நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்படுகிறது.[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. [1]
  2. [2]
  3. வார்ப்புரு:Url=https://www.explorebihar.in/tapovan-deoghar.html
  4. Deoghar Population Census 2011
  5. {Url=http://www.uniindia.com/news/others/deoghar-to-get-status-of-cultural-capital-of-jharkhand/11368.html}
  6. "Dipser College". www.dipsercollege.info. Retrieved 2020-01-05.
  7. Deoghar Junction
  8. "Jharkhand Renames Several Institutes After Atal Bihari Vajpayee". NDTV.com. Retrieved 2020-01-05.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Deoghar
"https://tamilar.wiki/w/index.php?title=தேவ்கர்&oldid=407340" இலிருந்து மீள்விக்கப்பட்டது