மணக்குடி
Jump to navigation
Jump to search
மணக்குடி | |
|---|---|
மணக்குடி, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு | |
| ஆள்கூறுகள்: 8°05′28″N 77°28′39″E / 8.0911°N 77.4774°E | |
| நாடு | |
| மாநிலம் | |
| மாவட்டம் | கன்னியாகுமரி |
| ஏற்றம் | 27.94 m (91.67 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 4,083 |
| மொழிகள் | |
| • அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
| • பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 629602 |
| புறநகர்ப் பகுதிகள் | புத்தளம், சாமிதோப்பு, தென்தாமரைக்குளம் |
| மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி |
| சட்டமன்றத் தொகுதி | நாகர்கோவில் |
மணக்குடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 27.94 மீ. உயரத்தில், (8°05′28″N 77°28′39″E / 8.0911°N 77.4774°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு மணக்குடி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் மணக்குடி ஊரின் மொத்த மக்கள்தொகை 4,083 பேர் ஆகும். இதில் பேர் 1,926 ஆண்கள் மற்றும் 2,157 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
கிறித்தவத் தேவாலயம்
புனித ஆண்ட்ரூசு தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் ஒன்று மணக்குடி பகுதியில் கட்டப்பட்டுள்ளது.[5]
அரசியல்
மணக்குடி பகுதியானது, நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
- ↑ ஜோதிஜி. திருப்பூர். தமிழர் தேசம். Free Tamil Ebooks.
- ↑ Prince S. Godson, Salom Gnana Thanga Vincent, S. Krishnakumar (2022-03-26). Ecology and Biodiversity of Benthos (in ஆங்கிலம்). Elsevier. ISBN 978-0-12-821162-5.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Tad S. Murty, U. Aswathanarayana, Niru Nirupama (2006-12-14). The Indian Ocean Tsunami (in ஆங்கிலம்). Taylor & Francis. ISBN 978-1-134-14032-9.
{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Manakudi Census Town City Population Census 2011-2025". www.census2011.co.in. Retrieved 2025-01-11.
- ↑ [1]
- ↑ "Manakudi Village , Rajakkamangalam Block , Kanniyakumari District". www.onefivenine.com. Retrieved 2025-01-11.