முசாகர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
முசாகர்
Musahar
நேபாளாத்தின் சௌரா கிராமத்தில் விறகு சேகரிக்கும் முசாகர் பெண்.
மதங்கள்இந்து சமயம்
மொழிகள்போச்புரி, மகாகி, மைதிலி
நாடுஇந்தியா, நேபாளம், வங்காளதேசம்
மூல மாநிலம்உத்தரப் பிரதேசம், பீகார், சார்க்கண்டு
பகுதிகிழக்கு கங்கைச் சமவெளி மற்றும் தெராய்
குடும்பப் பெயர்கள்மாஞ்சி
குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்தசரத் மாஞ்சி, ஜீதன் ராம் மாஞ்சி, பகவதி தேவி

முசாகர் (Musahar)[1] என்பது கிழக்கு கங்கை சமவெளி மற்றும் தெராய் பகுதிகளில் காணப்படும் ஒரு தலித் சமூகமாகும். இவர்கள் இரிசிதேவ், சதா, மாஞ்சி, பன்பாசி என்றும் அழைகப்படுகிறார்கள்.[2] பூயான் மற்றும் ராஜாவர் என்பதும் இவர்களுடைய பிற பெயர்கள்.[3] எலிகளைப் பிடிப்பதற்கான அவர்களின் முக்கிய முந்தைய தொழில் காரணமாக இவர்களின் பெயருக்கு 'எலிகளின் மேல் சவாரி செய்பவர்' என்று பொருள்படும் முசாகர் எனப் பெயர் வந்தது. வறுமை மற்றும் ஆதரவின்மை காரணமாக இந்த வேலையைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இன்றும் பலர் உள்ளனர்.

தோற்றமும் வரலாறும்

1890களில் பீகாரில் எர்பர்ட் கோப் ரிசிலி நடத்திய சாதிவாரி கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்ட ஒரு முசாகரின் புகைப்படம்

முசாகர் என்ற சொல் போச்புரியின் மூஸ் + அகர் (எலிகளை உண்பவர்) என்பதிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.[4] பிரம்மன் மனிதனைப் படைத்து, குதிரையில் சவாரி செய்ய கற்றுக் கொடுத்தார். முதல் முசாகர் தனது கால்களை வசதியாக வைத்துக் கொள்ள குதிரையின் வயிற்றில் துளைகளை இட முடிவு செய்தார். இது பிரம்மனை கோபப்படுத்தியது. அவரும் அவரது சந்ததியினரும் எலி பிடிப்பவர்களாக இருக்கவேண்டுமெனெ சபித்தனர் என ஒரு உள்ளூர் கதை இருக்கிறது.[5] எர்பர்ட் கோப் ரிசிலி 1881 ஆம் ஆண்டில் நடத்திய வங்காளத்தின் சாதிகள் மற்றும் பழங்குடியினரைப் பற்றிய கணக்கெடுப்பில், முசாகர்கள் சோட்டா நாக்பூர் மேட்டுநிலங்களைச் சேர்ந்த புய்யா பழங்குடியினத்தைச் சேர்ந்த கிளை என்று ஊகித்தார். இவர்கள் சுமார் 6 முதல் 7 தலைமுறைகளுக்கு முன்னர் சுமார் 300-350 ஆண்டுகளுக்கு முன்னர் கங்கை சமவெளிகளுக்கு குடிபெயர்ந்தனர் என ஊகித்தார்.[6] இந்தக் கோட்பாடு பொதுவாக சரியானது என்று இப்போது நம்பப்படுகிறது. நவீன மரபணு ஆய்வுகள் முசாகர்கள் சந்தாலிகள் மற்றும் ஹோக்கள் போன்ற முண்டா மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளன.[7] சில முசாகர்கள் ஒரு காலத்தில் தங்களுக்கு சொந்த மொழி இருந்ததாகவும், ஆனால் அவர்கள் குடிபெயர்ந்தபோது அதை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.[8]

தற்போதைய சூழ்நிலைகள்

முசாகர் பகத், சகதியா மற்றும் துர்காகியா ஆகிய மூன்று இன மரபு குலங்களைக் கொண்டுள்ளது. இவர்கள் இப்போது பெரும்பாலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். மேலும் சில சமயங்களில் வறண்ட காலங்களில் உயிர்வாழ எலி பிடிப்பைதையும் செய்கின்றனர். இவர்கள் இந்தியாவில் தலித்துகளிக்கும் கீழே மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளில் ஒன்றாக உள்ளனர். முசாகர் இந்துக்கள், ஹோலி மற்றும் தீபாவளி போன்றவைகளுடன் பெரும்பாலான உள்ளூர் இந்து பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். இவர்கள் தினபத்ரி மற்றும் புனியா பாபா உள்ளிட்ட பல பழங்குடி தெய்வங்களையும் வணங்குகிறார்கள்.[2] முசாகர்கள் குல பூஜை போன்ற தங்கள் சொந்த சடங்குகளையும் கொண்டுள்ளனர். இவர்கள் பூஜை மற்றும் திருமணங்களின் போது மதுபானத்தையும் வழங்குகிறார்கள்.[9]

கிழக்கு உத்தரப்பிரதேசம், தெற்கு நேபாளம் மற்றும் பீகார் முழுவதும் முசாகர் இனத்தவர்கள் காணப்படுகின்றனர். பீகாரின் கல் குவாரிகளில் இவர்கள் வேலை செய்கின்றனர். பலர் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களுக்கு விவசாயத் தொழிலாளர்களாக குடிபெயர்ந்துள்ளனர். பல நேப்பாளி முசாகர்கள் வருடத்தில் 6 மாதங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.[9] இவர்கள் போச்புரி, மகாகி மற்றும் மைதிலி போன்ற மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனால் இப்போது பலருக்கு இந்தியும் தெரியும்.[10]

நேபாளத்தில் உள்ள முசாகர்

2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பு முசாகர்களை மதேசி தலித் சமூகக் குழுவிற்குள் வகைப்படுத்துகிறது. 2011 ஆம் ஆண்டின் நேப்பாளி மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 234,490 மக்கள் (நேபாள மக்கள் தொகையில் 0.9%) முசாகர்களாக இருந்தனர். மாகாண வாரியாக முசாகர்களின் எண்ணிக்கை:

மேற்கோள்கள்

  1. Jengcham, Subhash. "Mushahar". Banglapedia: National Encyclopedia of Bangladesh. வங்காளதேசத்தின் ஆசியச் சமூகம்.
  2. 2.0 2.1 A Hasan & J C Das (ed.). People of India Uttar Pradesh. Vol. XLII Part Three. Manohar Publications. pp. 1006–1012.
  3. Sachchidananda (1 January 1988). Tradition And Development. Concept Publishing Company. pp. 124–. ISBN 978-81-7022-072-5. Retrieved 28 September 2012.
  4. Vijay S. Upadhyay; Gaya Pandey (1 January 1993). History Of Anthropological Thought. Concept Publishing Company. pp. 436–. ISBN 978-81-7022-492-1. Retrieved 28 September 2012.
  5. Sharda, Shailvee (March 2, 2017). "UP elections 2017: Plagued by 'divine curse', Musahars see no redemption in new politicians". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2019-08-28.
  6. Mukul (1999). "The Untouchable Present: Everyday Life of Musahars in North Bihar". Economic and Political Weekly 34 (49): 3465–3470. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. 
  7. Chaubey, Gyaneshwer (2008-02-08). "Language Shift by Indigenous Population: A Model Genetic Study in South Asia". International Journal of Human Genetics 08 (1). doi:10.31901/24566330.2008/08.01.04. பன்னாட்டுத் தர தொடர் எண்:0972-3757. 
  8. Giri, Madhu. Politico economic history of marginalization and change among the Musahars of east-central Tarai Nepal. கணினி நூலகம் 927407719.
  9. 9.0 9.1 Nepal human rights year book 2018 : English edition : this report covers the period - January to December 2017. Paudel, Madan, Mishra, Rajesh (Editor), Informal Sector Service Centre (Kathmandu, Nepal) (First ed.). Kathmandu, Nepal. 2018. ISBN 9789937896498. கணினி நூலகம் 1030370989.{{cite book}}: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link)
  10. S Gopal & Hetukar Jha (ed.). People of India Bihar. Vol. XVI Part Two. Seagull Books. pp. 702–707.
"https://tamilar.wiki/w/index.php?title=முசாகர்&oldid=470437" இலிருந்து மீள்விக்கப்பட்டது