லென்யாத்திரி


லென்யாத்திரி (Lenyadri மராத்தி: लेण्याद्री, Leṇyādri) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவின் நிர்வாகத் தலைமையிடமான ஜுன்னர் நகரத்தின் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த 30 பௌத்த குடைவரைக் கோயில்கள் மற்றும் விநாயகர் கோயில் அமைந்த இடமாகும்.[1] குகை எண் 7இல் லெண்யாத்திரி விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[2] இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் விகாரைகளாக அமைந்துள்ளது. (பிக்குகள் தங்குமிடங்கள்)
லென்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி.பி முதல் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை ஈனயான பௌத்தர்களால் கட்டப்பட்டதாகும். குகை எண் 7 இல் உள்ள விநாயகர் கோயில் கி.பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
பெயர்க் காரணம்
லென்யாத்திரி என்பதற்கு மராத்திய மொழியில் மலைக் குகை என்று பொருள்படும்.[3] இக்குகைகள் அமைந்த மலைக்கு கணேசர் மலை என்று அழைப்பர்.
குகை எண் 7 கணேசர் கோயில்
| லென்யாத்திரி | |
|---|---|
கணேசர் குகைக் கோயில் உட்புறம் | |
| ஆள்கூறுகள்: | 19°14′34″N 73°53′8″E / 19.24278°N 73.88556°E |
| பெயர் | |
| பெயர்: | கிரிஜாட்மஜ், லென்யாத்திரி |
| அமைவிடம் | |
| நாடு: | இந்தியா |
| மாநிலம்: | மகாராட்டிரா |
| மாவட்டம்: | புனே மாவட்டம் |
| அமைவு: | ஜுன்னர்]] அருகில் லென்யாத்திரி குகைகள் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | கிரிஜாட்மாஜா எனப்படும் விநாயகர் |
| சிறப்பு திருவிழாக்கள்: | விநாயகர் சதுர்த்தி மற்றும் கணேச ஜெயந்தி |
| கட்டிடக்கலையும் பண்பாடும் | |
| கட்டடக்கலை வடிவமைப்பு: | பௌத்த விகார குகை |
| வரலாறு | |
| கட்டப்பட்ட நாள்: | கி.பி முதல் நூற்றாண்டு விநாயகர் கோயில் கட்டப்பட்ட ஆண்டு அறியப்படவில்லை. |
மேற்கோள்கள்
- ↑ "Historical Monuments (Pune)". NIC - District-Pune. 2008. Archived from the original on 18 ஜனவரி 2010. Retrieved 5 February 2010.
{{cite web}}: Check date values in:|archivedate=(help) - ↑ "லெண்யாத்திரி கணபதி தேவஸ்தானம்". Archived from the original on 2016-10-29. Retrieved 2016-10-28.
- ↑ Grimes p. 13
நூல்கள்
- Grimes, John A. (1995). Ganapati: Song of the Self. SUNY Series in Religious Studies. Albany: State University of New York Press. pp. 38–9. ISBN 0-7914-2440-5.
- Anne Feldhaus. "Connected places: region, pilgrimage, and geographical imagination in India". Palgrave Macmillan. https://books.google.com/books?id=Cn7UK4y-FDUC&pg=PA140&dq=Astavinayak&lr=&as_brr=3&client=firefox-a&cd=1#v=onepage&q=Morgav&f=false. பார்த்த நாள்: 13 January 2010.
வெளி இணைப்புகள்