சளி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 19:41, 23 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20251023sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Mucus cells.png
வயிற்று சளி சுரப்பு செல்கள் சளியை உட்பகுதியில் சுரக்கின்றன (இளஞ்சிவப்பு)

சளி ( /ˈmjkəs/ MEW-kəs) ஒரு பல்பகுதியம் (Polymer) . இது வழுவழுப்பான திரவ சுரப்பு ஆகும். சளி சவ்வுகளில் உள்ள சளி சுரப்பி செல்களில் உற்பத்தியாகிறது. இருப்பினும் இது கலப்பு சுரப்பிகளில் இருந்து உருவாகலாம், இது சீரஸ் மற்றும் சளி செல்கள் ஆகிய இரண்டையும் கொண்டிருக்கும். இது ஒரு பிசுபிசுப்பு கொண்ட கூழ்மம். கனிம உப்புக்கள் , கிருமி நாசினி நொதிகள் (லைசோசைம் ), இம்யுனோகுளோபுலின்கள் , மற்றும் லாக்டோஃபெர்ரின் [1] போன்ற கிளைக்கோபுரதம் மற்றும் மியூசின்கள் காணப்படுகின்றன. சளிச் சவ்வில் உள்ள கோப்லட் செல்கள் மற்றும் கீழ்சளிசுரப்பு கோளங்களில் (submucosal glands) உற்பத்தி செய்யப்படுகின்றன. சுவாச குழாய் , இரைப்பை குடற்பாதை , சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் , பார்வை மற்றும் கேள்வி அமைப்புகளில் உள்ள எபிலீரியல் செல்களை (குழாய்களில் உள்ள) பாதுகாக்க உதவுகிறது. நீர்நில வாழ்வன ; மற்றும் செவுள்கள் உள்ள மீன் போன்றவைகளில் நோய்க்காரணிகளான பூஞ்சை , பாக்டீரியா [2] மற்றும் வைரஸ்களுக்கு எதிராக சளி சரப்புகளை உருவாக்கும் செல்கள் புற தோலில் உள்ளன. பெருபாலான சுரப்புகள் இரைகுடல் பகுதியில் சுரக்கின்றன.

சுவாச அமைப்பு

படிமம்:Blausen 0766 RespiratoryEpithelium.png
சுவாச மண்டலத்தில் சளி இயக்கம் சித்தரிக்கும் விளக்கம்

மனித சுவாச தொகுதியில் , சுவாசவழி மேற்பரப்பு திரவம் (ASL) என்றும் அழைக்கப்படும் சளி, நுரையீரலின் பாதுகாப்பிற்கு உதவுகிறது. சாதாரண சுவாசத்தின் போது மூக்கு வழியாகச் செல்லும் வெளிப்புற துகள்கள் நுரையீரலை அடையாமல் பாதுகாக்கின்றன.[3]

செரிமான அமைப்பு

படிமம்:Mucus in the Stomach.svg
இரைப்பைச் சுரப்பிகள் ஈபிதீயல் செல்கள் (B), முக்கிய செல்கள் (D) மற்றும் parietal செல்கள் (E) முதன்மை செல்கள் மற்றும் parietal செல்கள் சளியை (F) சுரக்கின்றன. கடுமையான அமில pH எதிராக வயிற்று (C) புறணியைப் பாதுகாக்க சளி (F) சுரப்பு. வயிற்று அமிலம் (A) அமிலமாக இருக்கும் போது சளி காரத்தன்மையோடிருக்கும்

மனித செரிமான அமைப்பில், சளி சுரப்பு, உணவு உணவுக்குழாய் வழியாக கடந்து செல்ல உதவுகிறது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=சளி&oldid=352696" இலிருந்து மீள்விக்கப்பட்டது