போசரி
Jump to navigation
Jump to search
போசரி Bhojapur | |
|---|---|
நகரம் | |
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் போசரியின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 18°33′37.5″N 73°50′09.69″E / 18.560417°N 73.8360250°E | |
| நாடு | |
| மாநிலம் | மாநகராட்சி |
| மாவட்டம் | பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி |
| ஏற்றம் | 585 m (1,919 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | மராத்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| 40192, அஞ்சல் சுட்டு எண் | 411039 |
| இடக் குறியீடு | தொலைபேசி குறியிடு எண்: 91-20-XXXX-XXXX |
| வாகனப் பதிவு | MH 12, MH 14 |
| நகரங்கள் | புனே & பிம்பிரி-சிஞ்ச்வடு |
போசரி (Bhosari (மராத்தி: भोसरी, IAST: Bhosarī), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியில் அமைந்த தொழிற்சாலைகள் மிக்க பகுதியாகும். போசரி கடல்மட்டத்திலிருந்து 530 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. போசரி பகுதி புனே நகரத்திற்கு வடக்கில் 19.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியின் பிம்பிளே குரவ் பகுதிக்கு வடகிழக்கே 9 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. நாசிக் வழியாக புனே - துலே செல்லும் தேசிய நெடுஞ்சாலை 60 போசரி வழியாகச் செல்கிறது.
கார் மற்றும் மோட்டார் வாகனத் தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட போசரி பகுதியில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.[1] மேலும் பிலிப்ஸ், தெர்மேக்ஸ் போன்ற ப்ல மின்னனுக் கருவிகள் உற்பத்திச்சாலைகள் கொண்டது.[2]
இதனையும் காண்க
- ஹவேலி தாலுகா
- பிம்பிரி-சிஞ்ச்வடு
- பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
- பிம்பிரி
- ஆகுர்தி
- பிம்பிளே குரவ்
- கசர்வடி
மேற்கோள்கள்
- ↑ "Tata Motors Limited | Largest Indian Automobile Manufacturer". www.tatamotors.com. Retrieved 2017-10-10.
- ↑ "Engineering solutions for heating, cooling, water & waste management, specialty chemicals, air pollution control". thermaxglobal.com (in ஆங்கிலம்). Retrieved 2017-10-10.