சாஞ்சி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Rasnaboy பயனரால் செய்யப்பட்ட 16:11, 17 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (அலகுத் திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
The Great Stupa at Sanchi
வகைபண்பாடு
ஒப்பளவு(i)(ii)(iii)(iv)(vi)
உசாத்துணை524
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1989 (13th தொடர்)

சாஞ்சி இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில், ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊராகும். இது மாநிலத்தின் நடுப்பகுதியில், போபாலில் இருந்து வடகிழக்கே 46 கிலோமீட்டர் தொலைவிலும்; பெசுனாகர், விதிசா ஆகிய இடங்களில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டு தொடக்கம் பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பழமை வாய்ந்த பல பௌத்த நினைவுச்சின்னங்கள் இங்கேயுள்ளன.[1]

வரலாறு

சாஞ்சியில் உள்ள பெரிய தூபி தொடக்கத்தில் பொ.ஊ.மு. மூன்றாம் நூற்றாண்டையண்டி பேரரசன் அசோகனால் கட்டுவிக்கப்பட்டது. இது புத்தரின் நினைவுப் பொருட்களின் மீது அமைக்கப்பட்ட ஒரு அரைக்கோள வடிவமான செங்கல் கட்டுமானம் ஆகும். மௌரிய வம்சத்துக்குப் பின் வந்த குஷானர்கள் போன்ற அவர்களுக்குப் பின்வந்த அரசர்கள் மேலும் பல தூபிகளைக் கட்டினர். முதல் தூபிக்கு மெருகூட்டப்பட்டது. தூபியைச் சுற்றி நான்கு பக்கங்களில் தோரண வாயில்களை அமைத்தனர். அதற்குப் பின் வந்த குப்த வம்சத்தினர் அங்கு புத்த மடாலயங்களையும் விகாரங்களையும் கட்டி, சாஞ்சியை மேலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாற்றினர். பொ.ஊ. 7-ம் நூற்றாண்டிலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை சாஞ்சி மிகவும் உன்னத நிலையிலிருந்தது. அதன்பின்னர் அதன் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்துபோனது.

பொ.ஊ. 1818 இல் ஜெனரல் டெய்லர் என்ற ஆங்கிலேயர் பாதி புதைந்திருந்த சாஞ்சியைக் கண்டுபிடித்தார். 1912 இல் தொல்லியல் துறையின் பொது இயக்குநராக இருந்த ஜான் மார்ஷல் சாஞ்சியை முழுவதுமாகப் புதுப்பித்தார்.[2]

இதனையும் காண்க

படிமம்:War over the Buddha's Relics, South Gate, Stupa no. 1, Sanchi.jpg
கௌதம புத்தரின் அஸ்தியை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக 8 கண இராச்சியங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை காட்டும் சிற்பம், சாஞ்சி தூபி எண் 1, காலம் பொ.ஊ.மு. அல்லது பொ.ஊ. முதலாம் நூற்றாண்டு[3]

படக்காட்சிகள்

மேற்கோள்கள்

  1. "Sanchi Stupa--A World Heritage Site". Archived from the original on 2015-12-24. Retrieved 2015-11-03.
  2. அ. மங்கையர்கரசி (3 சனவரி 2018). "அழகிய சாஞ்சி". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 3 சனவரி 2018.
  3. John Marshall, A Guide to Sanchi, 1918 p.46ff (Public Domain text)

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=சாஞ்சி&oldid=354091" இலிருந்து மீள்விக்கப்பட்டது